Published:Updated:

‘வேலூர் தேர்தல் எங்களால் ரத்து செய்யப்படவில்லை!’ - துரைமுருகன் விளக்கம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

``வேலூர் தொகுதிக்கான தேர்தல் எங்களால் ரத்துசெய்யப்படவில்லை. அப்படிச்சொல்வதே சரியான வாதமில்லை’’ என்று துரைமுருகன் கூறியிருக்கிறார்.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்
துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் ( ச.வெங்கடேசன் )

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறது. தி.மு.க வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்
துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்
ச.வெங்கடேசன்

தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் துரைமுருகன் தலைமையில் வேலூரில் நேற்றிரவு நடைபெற்றது. தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், காந்தி, வில்வநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நேரத்தில் எங்கள் வீடு மற்றும் கல்லூரியில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அதில் எதையும் எடுக்கவில்லை என்று அவர்களே எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்திருக்கிறார்கள்.

துரைமுருகன்
துரைமுருகன்
ச.வெங்கடேசன்

வருமானவரித் துறைக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களால்தான் வேலூர் தேர்தல் ரத்துசெய்யப்பட்டதாகக் கூறுவது சரியான வாதமில்லை.

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருக்கலாம். ஆனால், அது நிலைக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். தமிழகத்தில் தற்காலிக ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது.

கதிர்ஆனந்த்
கதிர்ஆனந்த்
ச.வெங்கடேசன்

காட்பாடியில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்குப் பயனுள்ளதாக இல்லை. வரும் 12-ம் தேதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் மனுத் தாக்கல் செய்கிறார்’’ என்றார்.