ஹரியானாவில் மாநிலங்களவை, உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்றைய தினம் ஹரியானாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பா.ஜ.க தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், ``உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கெனவே பதவிகளில் இருக்கும் பா.ஜ.க தலைவர்கள் அவர்களின் உறவினர்களை நிறுத்த வேண்டாம். பா.ஜ.க-வுக்கு போட்டியாளர்களிடம் தோல்வியடைவது கூட பெரிதில்லை. ஆனால், ஒரு தலைவரின் குடும்பத்தை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் சுதேஷ் கட்டாரியா, ``மாநிலங்களவைத் தேர்தலிலும் கட்சியின் தேசியத் தலைவரின் வார்த்தைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அரசியலில் ஒரே குடும்பத்தை உயர்த்துவதை கட்சி எதிர்க்கிறது. பா.ஜ.க தகுதியான வேட்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் கட்சி. ராஜ்ய சபா தேர்தலிலும் அதே திட்டம்தான் கடைபிடிக்கப்பட்டது. அதனால், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது இதுவே பின்பற்றப்படும்” என்றார்.
