Published:Updated:

`தண்ணீர் பயிர் பிரச்னை மட்டுமல்ல; உயிர் பிரச்னை!' - ஜி.கே.வாசன்

``தண்ணீர் பயிர் பிரச்னை அல்ல; உயிர் பிரச்னை. நிலத்தடி நீரைப் பெருக்க 130 கோடி இந்தியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்” என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அறிவுறுத்தியுள்ளார்.

GK Vasan
GK Vasan

தூத்துக்குடி தா.ம.கா தெற்கு மாவட்டச் செயலாளர் விஜயசீலனுக்குச் சொந்தமான பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜி.கே.வாசன் தூத்துக்குடி வந்தார். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒரே மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி என்பது மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும். அவரவர் தாய் மொழியையே முதல் மொழியாகக் கொள்ள வேண்டும்.

GK Vasan
GK Vasan
`நாடு முழுவதற்குமான மொழி, இந்தி!' - அமித் ஷா

துணை மொழியாக ஆங்கிலத்தையும், மூன்றாவது மொழியாக விருப்பப்பட்ட ஏதேனும் ஒரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும். 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு புகுத்துவது என்பது சுமையை ஏற்படுத்தும். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் சுமையை அதிகரிக்கும். ஆகவே. இது குறித்து அரசு முறையாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு நன்மையைச் செய்யும் வகையில் அரசு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தைத் பொறுத்தவரையில் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடுகள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை. தண்ணீர் என்பது பயிர் பிரச்னை மட்டுமல்ல; உயிர் பிரச்னையாகவும் மாறி உள்ளது. ஆகவே, நிலத்தடி நீரைப் பெருக்குவதற்கு 130 கோடி இந்தியர்களும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் விதமாக அனுமதி பெறாமல் பொதுஇடங்களில் வைக்கப்படும் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

GK Vasan
GK Vasan
`ஜனநாயகப் போர்க்களத்தை சந்திக்க தி.மு.க தயங்காது!’ - அமித்ஷாவை கண்டிக்கும் ஸ்டாலின்

பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைப்பதை அரசு முறைப்படுத்த வேண்டும். இதில், விளம்பர பதாகைகள் அச்சடிக்கும் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் தா.ம.கா தொடர்கிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தா.ம.கா பெரும்பாலான இடங்களில் போட்டியிடும்” என்றார்.