Published:Updated:

``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்!" - உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

``பாஜக-வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்’’ என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்!" - உத்தவ் தாக்கரே

``பாஜக-வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்’’ என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பிறந்ததினத்தையொட்டி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அதில், ``பாஜக-வுடன் கூட்டணிவைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம். ஒரு நேரத்தில் நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. நாங்கள் அவர்களை வளர்த்தோம். அதனால்தான் 25 ஆண்டுகளை அவர்களுடன் கூட்டணிவைத்து வீணாக்கிவிட்டோம் என்று சொல்கிறேன். சிவசேனா தனது இந்துத்துவா கொள்கையைக் கைவிடவில்லை. இந்துத்துவாவுக்காகவே நாங்கள் அதிகாரத்தை விரும்புகிறோம்.

இப்போது இவர்கள் (பாஜக) கடைப்பிடிக்கும் இந்துத்துவா என்பது வெறும் பாசாங்கு மட்டுமே. அதிகாரத்துக்குத்தான் அவர்களின் இந்துத்துவா. அவர்கள் இந்துத்துவா என்ற போலித் தோலை மட்டுமே அணிந்துள்ளனர். மக்கள் எங்களிடம் `இந்துத்துவா கொள்கையை விட்டுவிட்டீர்களா?’ என்று கேட்கிறார்கள்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

நாங்கள் பாஜக-வை மட்டும்தான் விட்டிருக்கிறோம். இந்துத்துவாவை விடவில்லை. பாஜக என்பதன் அர்த்தம் இந்துத்துவா கிடையாது. ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே பாஜக மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேருகிறது. பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிவதுதான் பாஜக-வின் கொள்கை. தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் தேவைப்பட்டோம். அதனால்தான் பிராந்தியக் கட்சிகளான சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேருகின்றனர். வாஜ்பாய் ஆட்சி அமைத்தபோது மனப்பூர்வமாக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போது இந்துத்துவாவைச் சொந்த நலனுக்குத்தான் பயன்படுத்துகின்றனர். சிவசேனா தொண்டர்கள் சட்டமன்றம், மக்களவைத் தேர்தலோடு நின்றுவிடக் கூடாது. வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்துத் தேர்தல்களிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும். வங்கி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் தேர்தலுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும். இப்போது நாம் கோவா, உத்தரப்பிரதேசத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிலும் போட்டியிடுவோம். மற்ற மாநிலங்களிலும் சிவசேனா வெற்றிபெற்று டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

பாஜக - சிவசேனா கூட்டணி
பாஜக - சிவசேனா கூட்டணி

உத்தவ் தாக்கரே முதுகுத்தண்டுவடப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார். அவருடைய மகன் ஆதித்யா தாக்கரேதான் இப்போது, உத்தவ் தாக்கரே ஆலோசனையின்பேரில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism