Published:Updated:

``2024 பொதுத்தேர்தல்... 17 கட்சிகள் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்” - சொல்கிறார் நாராயணசாமி

நாராயணசாமி

``வரும் 13-ம் தேதி அமலாக்கத்துறையில் ராகுல் காந்தி ஆஜராகும்போது, எல்லா மாநிலங்களிலும் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தவிருக்கிறோம்.” - நாராயணசாமி

``2024 பொதுத்தேர்தல்... 17 கட்சிகள் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம்” - சொல்கிறார் நாராயணசாமி

``வரும் 13-ம் தேதி அமலாக்கத்துறையில் ராகுல் காந்தி ஆஜராகும்போது, எல்லா மாநிலங்களிலும் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தவிருக்கிறோம்.” - நாராயணசாமி

Published:Updated:
நாராயணசாமி

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் பற்றி பேசிய சர்ச்சைக் கருத்துகள் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றைச் சார்ந்த அமைப்புகள் சிறுபான்மை மக்களைக் கொச்சைப்படுத்திப் பேசிவருகின்றன. இது உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அண்டை நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்லாமிய நாடுகளில் உள்ள பிற மதத்தினர் இரண்டு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகிகளுடன் நாராயணசாமி
நிர்வாகிகளுடன் நாராயணசாமி

வரும் 13-ம் தேதி அமலாக்கத்துறையினர் முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வாங்கியதில் பணப் பரிவர்த்தனை நடந்தாக சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியிருக்கிறார். அப்போது இது குறித்து விசாரணை நடத்தி, ”எந்தவிதமான பணப் பரிவர்த்தனையும் தவறாக நடக்கவில்லை” என வழக்கு முடிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. பா.ஜ.க-வின் அங்கங்களாக, சேவகர்களாக, அமலாக்கதுறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ நடந்துகொள்கின்றன. கடந்த 2014 முதல் இந்த அமைப்புகளைப் பயன்படுத்தி பா.ஜ.க., பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிற கட்சியினர் மீது அமலாக்கத்துறை, வருமான வரிதுறையினர் நோட்டீஸ் அனுப்பி பொய் வழக்கு போடப்பட்டு மிரட்டப்படுகின்றனர்.

நாராயணசாமி
நாராயணசாமி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தில் நான் அமைச்சராக இருந்தபோது, எந்தப் பொய் வழக்கும் போட்டது கிடையாது. நாங்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்ததும் கிடையாது. விதிமுறைப்படி எங்கள் அரசு செயல்பட்டது. வரும் 13-ம் தேதி அமலாக்கத்துறையில் ராகுல் காந்தி ஆஜராகும்போது, எல்லா மாநிலங்களிலும் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி, கடந்த எட்டு ஆண்டுகளில் எந்தச் சாதனையையும் செய்யவில்லை. பொருளாதார வளர்ச்சி தற்போது ஆறு சதவிகிதமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. சமையல் காஸின் விலை ரூ.1,080-ஆக இருக்கிறது. காய்கறி, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. இதுதான் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனையாக இருக்கிறது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கொரோனா காலத்தில் சிறுதொழில், குறுதொழில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என சுமார் 25 கோடிப் பேர் வேலை இழந்துள்ளனர்.

நாராயணசாமி
நாராயணசாமி

கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் இறந்தவர்கள் 5 லட்சம் பேர்தான் என மோடி அரசு கூறுகிறது. ஆனால், சுமார் 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்துவிட்டதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழ்நாடு அரசின் மீது அண்ணாமலை ஆதாரமில்லாத குற்றச்சாட்டைவைக்கிறார். 2024-ம் ஆண்டு, 17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலைச் சந்திப்போம். நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism