Published:Updated:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறும்! - தேமுதிக பிரசாரத்தில் பிரேமலதா பேச்சு!

பிரேமலதா பிரச்சாரம்

”இது உங்களுக்கான தேர்தல். பல உள்ளாட்சி பகுதிகள் எந்த ஒரு முன்னேற்றமும் அடையாமல் அப்படியே இருக்கிறது.அதனை எங்களால் மாற்றமுடியும் “ என திருச்சி மக்களிடம் வாக்கு சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறும்! - தேமுதிக பிரசாரத்தில் பிரேமலதா பேச்சு!

”இது உங்களுக்கான தேர்தல். பல உள்ளாட்சி பகுதிகள் எந்த ஒரு முன்னேற்றமும் அடையாமல் அப்படியே இருக்கிறது.அதனை எங்களால் மாற்றமுடியும் “ என திருச்சி மக்களிடம் வாக்கு சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்!

Published:Updated:
பிரேமலதா பிரச்சாரம்

திருச்சி மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டா. காந்தி மார்க்கெட் அருகில் மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு நடந்த கூட்டத்தில் பேசிய அவர் "கேப்டன் உடல்நலத்துடன் சிறப்பாக இருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அவரது வாழ்த்துகளைச் சொல்லச்சொல்லி என்னை அனுப்பினார்.

தேமுதிக வேட்பாளர்கள்
தேமுதிக வேட்பாளர்கள்

அ.தி.மு.க-வும், தி.மு.க-வும், மாறி மாறி குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் ஏதாவது மாற்றம் நடந்திருக்கிறதா என்றால் இல்லை. பொய் வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டோம். பொய் வாக்குறுதிகளைக் கொடுக்கும் கட்சிகளை மக்கள் இனம் கண்டுவிட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்களது வார்டில் யார் வெற்றி பெற்று வந்தால் உங்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வார் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு உணர்ந்து ஓட்டுப்போடுங்கள். இது உங்களுக்கான தேர்தல். பல உள்ளாட்சி பகுதிகள் எந்த ஒரு முன்னேற்றமும் அடையாமல் அப்படியே இருக்கிறது. அதனை எங்களால் மாற்றமுடியும்.

தே.மு.தி.க வெற்றி பெற்றவுடன், காந்தி மார்க்கெட் பகுதியில் ஷேர் ஆட்டோ வசதி செய்து தரப்படும். வெற்றி பெறும் முன்னரே பல்வேறு உதவிகளை மக்களுக்குச் செய்த தே.மு.தி.க வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் இன்னும் பல நன்மைகள் செய்வார்கள்.

பிரேமலதா பிரச்சாரம்
பிரேமலதா பிரச்சாரம்

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாய் தொல்லைகளால் மக்கள் அவதியுறும் நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாப்போம்” என்றதோடு மாநகரில் உள்ள இதர பிரச்னைகளையும் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார் பிரேமலதா!