Published:Updated:

`தி.மு.க-வை இரண்டாகப் பிரித்துவிடுவோம்!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

`தி.மு.க வெறும் பானை. ஆனால், அ.தி.மு.க பொங்கல் பானை. தி.மு.க தன்னுடைய கட்சியை எப்படி வேண்டுமானாலும் உருட்டிக்கொள்ளலாம்.'

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )

`எடப்பாடி ஆட்சியை ஸ்டாலின் கலைக்க நினைத்தால் தி.மு.க-வையே இரண்டாகப் பிரித்துவிடுவோம்' எனத் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் ராஜேந்திர பாலாஜி
செய்தியாளர் சந்திப்பில் ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, `எடப்பாடி பழனிசாமி அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதன் பிரதிபலிப்பு வேலூர் தேர்தல் முடிவில் தெரியும். ஸ்டாலின் எதைக் கண்டாலும் பயப்படுகிறார். தன் நிழலைக் கண்டே அவர் பயப்படுகிறார்.

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன?

அ.ம.மு.க என்பது கட்சி இல்லை. அது ஒரு சிறிய குழு, கட்டப் பஞ்சாயத்து இயக்கம். மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்றால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது. தி.மு.க வெறும் பானை. ஆனால், அ.தி.மு.க பொங்கல் பானை. தி.மு.க தன்னுடைய கட்சியை எப்படி வேண்டுமானாலும் உருட்டிக்கொள்ளலாம். ஆனால், அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்களுக்கான திட்டங்களைப் பக்குவமாகத்தான் செய்ய முடியும். தமிழ் வளர்ச்சிக்காகத் தி.மு.க எதையும் செய்யவில்லை. தமிழ்மொழியை விற்றுப் பிழைத்தவர்கள் அவர்கள். தமிழர்களின் உரிமையைப் பற்றிப் பேச தி.மு.க-வுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ தகுதி கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள நல்ல திட்டங்களைப் பார்த்து ஆந்திராவில் செயல்படுத்த முயல்கிறார் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி. கர்நாடகாவில் ஆட்சியைக் கலைத்ததுபோல தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியை ஸ்டாலின் கலைக்க நினைத்தால் தி.மு.க-வை நாங்கள் இரண்டாக பிரித்துவிடுவோம்' என்றார்.