Published:Updated:

``அவங்க ரூ.3,000 கொடுப்பாங்களா... நாங்க ரூ.6,000 தருவோம்” - பாஜக முன்னாள் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

பாஜக - ரமேஷ்
News
பாஜக - ரமேஷ்

`கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தலா ரூ.6,000 கொடுப்போம்’ என்று பாஜக முன்னாள் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

``அவங்க ரூ.3,000 கொடுப்பாங்களா... நாங்க ரூ.6,000 தருவோம்” - பாஜக முன்னாள் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

`கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தலா ரூ.6,000 கொடுப்போம்’ என்று பாஜக முன்னாள் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பாஜக - ரமேஷ்
News
பாஜக - ரமேஷ்

கர்நாடக சட்டமன்றத்துக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவுக்கு வந்து மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்துவிட்டுச் சென்றார். பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ், பெலகாவி மாவட்டத்திலுள்ள சுலேபேவி என்ற கிராமத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். பெலகாவி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி பற்றி ரமேஷ் விமர்சித்தார். ``அவர் (லட்சுமி) தனது தொகுதி வாக்காளர்களுக்கு கிப்ட் சப்ளை செய்வதைப் பார்க்கிறேன்.

அவர் இதுவரை ரூ.1,000 மதிப்புள்ள குக்கர், மிக்சி வகைகளைத்தான் கொடுத்திருப்பார். அவர் மேலும் கிப்ட் கொடுக்கலாம். அவை அனைத்தையும் சேர்த்து ரூ.3,000 இருக்குமா... எனது கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தலா ரூ.6,000 கொடுக்காவிட்டால் வாக்களிக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

பாஜக - ரமேஷ்
பாஜக - ரமேஷ்

வாக்காளர்களுக்கு ரூ.6,000 கொடுப்போம் என்று பாஜக முன்னாள் அமைச்சர் தெரிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``இது போன்ற செயல்களுக்கு கட்சியில் இடமில்லை. எங்களது கட்சிக் கொள்கையால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. 2023-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்போம். பணம் கொடுப்பதாக யாராவது வாக்குறுதியளித்தால் அது கட்சியின் கருத்து கிடையாது. அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும்” என்று தெரிவித்தார்.

``பாஜக முன்னாள் அமைச்சரின் அறிக்கையைத் தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பாஜக-வின் ஊழல் அளவைக் காட்டுகிறது. இதை ஏன் தேர்தல் கமிஷனோ அல்லது வருமான வரித்துறையோ கண்டுகொள்ளவில்லை” என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கேள்வி எழுப்பினார். ``ரமேஷ் சொன்னது சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் அமலுக்கு வரவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டால் அவர்களை பாஜக தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.