Published:Updated:

எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் சந்திப்பு: பன்னீர் ஆப்சென்ட்?! திமுக மீதான புகார்கள் ரெடி! பின்னணி என்ன?

இந்த நிலையில் நேற்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. தொடர் சோதனை காரணமாக அ.தி.மு.க தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை காலை தமிழக ஆளுநர் ரவியை சந்திக்கவிருக்கிறார். அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆளும் தி.மு.க அரசு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தc சந்திப்பு நடக்கவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா..? கழகம் காக்கப்படும்!” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீதான விசாரணை நடக்கும்” என்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தற்போது முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி ஆகியோர் வீடுகளில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. நேற்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. தொடர் சோதனை காரணமாக அ.தி.மு.க தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் `இனியும் நாம் அமைதியாக இருந்தால், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் அனைவரின் மீதும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்கும்’ என்று புலம்பியிருக்கிறார்கள். மற்றொருபுறம் வேலுமணியும் தங்கமணியும் ``அவர்களுக்கு எதிராக நாம் ஆளுநரிடம் புகார் கொடுப்பது மட்டுமே சரியான நடவடிக்கை. குறிப்பாக தி.மு.க அமைச்சர்கள் சிலரின் மீதும், எம்.பி-க்கள் மீதும் உள்ள புகார்களைப் பட்டியலிட்டு நாமும் ஆளுநரைச் சந்திக்கலாம்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க நிர்வாகிகள்
அ.தி.மு.க நிர்வாகிகள்

அதன் பிறகே ஆளுநரிடம் நேரம் கேட்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர். ``தி.மு.க அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுத்துவருதையும், தி.மு.க அமைச்சர்கள் மீதுள்ள புகார்களையும் ஆளுநரிடம் எழுத்துபூர்வமாகக் கொடுக்கவிருக்கிறார்கள்” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
ஆளுநருடன் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்துகொள்ள மாட்டார் என்கிறார்கள். அவர் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநரை சந்திக்க முடிவாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பு ஆளுநரைச் சந்தித்து தி.மு.க தரப்புமீது புகார்ப் பட்டியலை வாசித்தது. அதேபோன்றதொரு சந்திப்புதான் தற்போது அ.தி.மு.க தரப்பில் நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கையின்போது அ.தி.மு.க பூத் ஏஜென்ட்டுகளைப் பல இடங்களில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழையவே விடவில்லை எனவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளிலேயே அறிக்கை வெளியிட்டிருந்தார். அதோடு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், ஐ.பெரியசாமி ஆகியோர் அடாவடியில் ஈடுபட்டதோடு அ.தி.மு.க-வினர் மீது சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு தனது காரை ஏற்ற முற்பட்டது குறித்து புகாரளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் புகார் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்தும், தங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், தி.மு.க-வினர் மீதுள்ள புகார்கள் குறித்தும் ஆளுநரிடம் பேசவிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி" என்கிறார்கள் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு