Published:Updated:

ஆதரிக்கும் பன்னீர், அடம்பிடிக்கும் எடப்பாடி... இனி என்ன நடக்கும் அதிமுக-வில்?!

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

``அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசும் பட்சத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையிலான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படும்” என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதரிக்கும் பன்னீர், அடம்பிடிக்கும் எடப்பாடி... இனி என்ன நடக்கும் அதிமுக-வில்?!

``அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசும் பட்சத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையிலான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படும்” என எதிர்பார்க்கப்படுகிறது.

Published:Updated:
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

பொதுக்குழு தீர்ப்பு தனக்குச் சாதகமாக வரவே மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோய் இருக்கிறார் பன்னீர் செல்வம். தனது ஆதரவாளர்களுடன் இனிப்புகளை பரிமாறி வெற்றியைக் கொண்டாடிய பன்னீர், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியைக் கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், நீதிமன்ற தீர்பிற்குப் பின்னர், நிருபர்களைச் சந்தித்த பன்னீர் செல்வம், ``அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை மனதிலிருந்து அப்புறப்படுத்தி மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. பழைய மனக் கசப்பை மறந்து ஒன்றாகச் செயல்படுவோம்" என எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலா, தினகரனுக்கு அழைப்பு விடுத்தார்.

தினகரன், சசிகலா
தினகரன், சசிகலா

பன்னீரின் அழைப்பைப் புறக்கணித்துப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "நான் எப்போதும் சொந்தக் காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்குச் சோதனையான காலங்களில் உண்மையாகச் செயல்பட்டேன். எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. பொதுக்குழு நடக்கும்போது தலைமை அலுவலகத்தைச் சேதப்படுத்தினார். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே அதிமுகவினரின் விருப்பம். தொண்டர்களைக் காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி ஒன்றிணைய முடியும்?" எனக்கூறினார். ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தும் அதை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பது அதிமுக தொண்டர்கள் இடையே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிமுக-வில் முடிவில்லாமல் செல்லும் இந்த விவகாரம் குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம், ``அதிமுகவை ஒருங்கிணைத்துச் செல்ல ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்தாலும், அதை பழனிசாமி புறக்கணித்தே வருகிறார். பன்னீர் செல்வத்தின் கருத்தை டிடிவி.தினகரன் வரவேற்று இருக்கிறார். சசிகலாவும் ஆதரவு மனப்பான்மையிலேயே உள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி வசம் இருப்பதால் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் கட்சி சிறப்பாக செயல்பட முடியும்" என்றனர்.

அமித்ஷா
அமித்ஷா

இந்தச்சூழலில், தமிழ்நாடு பாஜக சார்பில் திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 29-ம் தேதி ஒருநாள் பயணமாகக் கோவை வருகிறார். அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலமாக மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அன்றைய தினம் பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அமித் ஷாவைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசும்பட்சத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு இடையிலான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அமித் ஷாவின் வருகை அதிமுக தரப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.