Published:Updated:

``பிரதமர் சொன்னபோது எனக்குப் பேச்சே வரவில்லை” - ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வானது குறித்து முர்மு

நிதின் கட்கரியுடன் முர்மு

``தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் சொன்னவுடன் சிறிது நேரம் எனக்கு பேச்சே வரவில்லை” என்று ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

``பிரதமர் சொன்னபோது எனக்குப் பேச்சே வரவில்லை” - ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வானது குறித்து முர்மு

``தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் சொன்னவுடன் சிறிது நேரம் எனக்கு பேச்சே வரவில்லை” என்று ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Published:Updated:
நிதின் கட்கரியுடன் முர்மு

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் திரெளபதி முர்மு தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று மாலை மும்பைக்கு வந்தார். அவர் மும்பை விமான நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். முர்முவுடன் பாஜக தலைவர்களில் ஒருவரான வினோத் தாவ்டேயும் வந்திருந்தார். முர்முவுக்குப் பாரம்பர்ய முறைப்படியும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஹோட்டலில் அவரை ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள், பாஜக எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள் மற்றும் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் சந்தித்தனர். அவர்கள் மத்தியில் முர்மு பேசுகையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.`` பாஜக-வின் நாடாளுமன்றக்குழு ஜனாதிபதி வேட்பாளருக்கான பெயரை உறுதி செய்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி எனக்கு போன் செய்தார். அவர் போன் செய்து எனக்குத் தகவல் கொடுத்தவுடன் சிறிது நேரம் எனக்குப் பேச்சே வரவில்லை. அவருக்கும், பாஜக-வுக்கும் நன்றி தெரிவித்தேன்” என்றார்.

தொடர்ந்து மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவித்ரிபாய் புலே ஆகியோர் இந்தச் சமுதாயத்துக்கு செய்த பணிகளை நினைவுகூர்ந்த முர்மு, பழங்குடி இனத்திலிருந்து தான் வந்திருப்பதாகவும், அரசியலுக்கு வரும் முன்பு குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

முர்முவுக்கு பாரம்பர்ய வரவேற்பு
முர்முவுக்கு பாரம்பர்ய வரவேற்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நான் ஆளுநராக வருவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அந்தப் பதவி முடிந்த பிறகு பழங்குடியின குழந்தைகள் மற்றும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்டேன். நான் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாதவள். அப்படியிருந்தும் கடின உழைப்பால் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

முர்முவுக்கு சிவசேனா ஆதரவு கொடுக்கும் என்று அதன் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களுக்கு முர்முவைக் காண அழைப்பு விடுக்கவில்லை. அதோடு ஆதரவு கொடுக்கும்படி கேட்டு முர்மு, உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தின் கதவைத் தட்டவும் இல்லை. ஆனால் கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக உத்தவ் தாக்கரே முர்முவுக்கு ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.