Published:Updated:

'வேடிக்கை' பார்த்த கமல்... வெற்றிடம் நிரப்புவரா ரஜினி?

'கராத்தே'வுக்குத் தேவை ஏதாவது ஒரு மேடை. ஏற்கெனவே கழகங்கள், கதர்கள் எனப் பார்த்து முடித்தாகிவிட்டது. அடுத்ததாக, 'காவி' வேஷத்துக்கும் தயார் என்று சிக்னல் கொடுக்கிறார்... அவ்வளவுதான்.

rajini
rajini

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவராக ரஜினியை நியமித்தால் எப்படி இருக்கும்?

தமிழிசை அளவுக்கு இல்லாவிட்டாலும், இது தனி ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். 'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது'. ஆக, நம் கையில் என்ன இருக்கிறது? மேலும் கேள்விகளுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/33e1HPj

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

'ஜெயலலிதா, கருணாநிதி மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், 2021-ம் ஆண்டில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் பதவி ஏற்பது உறுதி' என்று கராத்தே தியாகராஜன் சொல்கிறாரே?

'உலகின் மிகப் பழைமையான மொழி தமிழ்தான்' என்று ஐ.நா மேடை வரை சென்று முழங்குகிறார் மோடி. ஆனால்

'கராத்தே'வுக்குத் தேவை ஏதாவது ஒரு மேடை. ஏற்கெனவே கழகங்கள், கதர்கள் எனப் பார்த்து முடித்தாகிவிட்டது. அடுத்ததாக, 'காவி' வேஷத்துக்கும் தயார் என்று சிக்னல் கொடுக்கிறார்... அவ்வளவுதான். பாவம், இதைக் கேட்டு ரஜினி ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டுவிடக் கூடாது!

பெ.வேலுமணி, நாராயண பாளையம்.

பொது மருத்துவமனை, பொதுப் பள்ளிக்கூடம், பொதுப் பேருந்து நிலையம்போல் தமிழகத்தில் பொது மயானம் சாத்தியமா?

சத்தியவான்கள் ஆட்சிக்கு வந்தால், சாத்தியமே!

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

'இளைஞர்கள் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பதால்தான் அரசியலில் கறை படிந்திருக்கிறது' என்கிறாரே கமல்ஹாசன்?

ஆளுமையுள்ள இளைஞராக இருந்தபோதும், சாதாரண இளைஞர்போல் இவரும் வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தார்!

'வேடிக்கை' பார்த்த கமல்... வெற்றிடம் நிரப்புவரா ரஜினி?

ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

'நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்துக்கு வித்திட்டவரே 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' கமல்ஹாசன்தான்' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே?

அவராவது சினிமாவில்தான் ஆள்மாறாட்டம் செய்தார். இவர்கள், நிஜத்தில் 'ஆட்சி மாறாட்டமே' செய்துகொண்டுள்ளனரே!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தமிழ் மொழிமூலம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறதா பா.ஜ.க?

அப்படித்தான் தெரிகிறது. 'உலகின் மிகப் பழைமையான மொழி தமிழ்தான்' என்று ஐ.நா மேடை வரை சென்று முழங்குகிறார் மோடி. ஆனால், தமிழகத்தில் இருக்கும் தன் அடிபொடிகளை இந்த விஷயத்தில் அவர் நம்புவதுதான் பரிதாபம். அவர்கள், தொடர்ந்து 'கள்ளிப்பால்' ஊற்றுவதில் அல்லவா குறியாக இருக்கிறார்கள்!

- மேலும் பல 'நறுக்' கேள்விகளுக்கு கழுகார் அளித்துள்ள 'நச்' பதில்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > கழுகார் பதில்கள்! https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-question-and-answer-oct-13

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |