Published:Updated:

ஆளுநர் Vs முதல்வர்: தமிழகத்தில் தடம்பதிக்க முயல்கிறதா பாஜக?!

ஸ்டாலின், ரவி

தி.மு.க - பா.ஜ.க இடையேயான கருத்து மோதல்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரத்துக்கொண்டிருக்கின்றன.

ஆளுநர் Vs முதல்வர்: தமிழகத்தில் தடம்பதிக்க முயல்கிறதா பாஜக?!

தி.மு.க - பா.ஜ.க இடையேயான கருத்து மோதல்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரத்துக்கொண்டிருக்கின்றன.

Published:Updated:
ஸ்டாலின், ரவி

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையேயான பனிப்போர் தீவிரமடைந்திருக்கிறது. கூடவே, தி.மு.க - பா.ஜ.க இடையேயான கருத்து மோதல்களும் தமிழக அரசியல் களத்தில் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம். அடுத்தது தமிழகத்தில் ஆட்சியமைப்போம்" என்று கூறியிருந்தார்.

``நடப்பதையெல்லாம்வைத்துப் பார்க்கையில் பா.ஜ.க தமிழகத்தில் தடம் பதிப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தமிழக பாஜக
தமிழக பாஜக

இந்த நிலையில், `தமிழகத்தில் தடம்பதிக்க முயல்கிறீர்களா?!' என்ற கேள்வியை பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் முன்வைத்தோம். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ``நாங்க தமிழகத்தில் தடம்பதிக்க முயலவில்லை. எங்களைப் பொறுத்தவரை ஏற்கெனவே தடம்பதித்துவிட்டோம். அந்தத் தடம் அழிந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

20 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி முதலில் எங்களைத் தமிழக சட்டமன்றத்துக்குள் அனுப்பினார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது மீண்டும் சென்றிருக்கிறோம். இதுவே பெரிய வளர்ச்சிதான்! ஏதாவது ஒரு பிரச்னைக்கு தினமும் ரியாக்‌ஷன் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது டெல்லியின் உத்தரவு. சில சமயங்களில் எதிர்வினையாக முடிந்தாலும் சரி. அப்படித்தான், அ.தி.மு.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை, கூட்டணி முறிவு, மாணவி மரணம், ராகுலுக்கு பதிலடி, வேட்பாளர் தேர்வு என அனுதினமும் பா.ஜ.க பற்றிய செய்திகள் வந்துகொண்டேயிருக்க வேண்டும்.

பாஜக அலுவலகம்
பாஜக அலுவலகம்

ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் மாநிலப் பிரதிநிதி ஆளுநர் என்பதால், அவரை பேக்கப் செய்யவேண்டியது எங்கள் கடமை. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒன்று அந்தத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் என்றுதான் இத்தனை நாள்களாக கட்சிகள் கத்திக்கொண்டிருந்தன. தற்போது அதைத் திருப்பி அனுப்பிவிட்டார் ஆளுநர். உடனே அதை எப்படித் திருப்பி அனுப்பலாம் என்று கத்துகிறார்கள். வேறு என்னதான் செய்யச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி

பிப்ரவரி ஒன்றாம் தேதியே ஆளுநர் அனுப்பிவிட்டார். இரு தினங்கள் அதை வெளியிடாமல் இருந்தது தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். சரியாக பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாளில் அதை வெளிப்படுத்தி, அண்ணா ஆளுநர் குறித்துச் சொன்ன கருத்தை வேண்டுமென்றே முதல்வரே ட்விட்டரில் பதிவிட்டு ஆளுநருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்.

எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுதான் தலைமை பீடம். அப்படியிருக்க, ஒவ்வொரு மாநில அரசையும் மத்திய அரசு நேரடியாகக் கண்காணிக்க முடியாது என்பதால்தான், அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநர் என்கிற பதவியை உருவாக்கி அவர்கள் மூலம் மத்திய அரசு கண்காணித்துவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

வேறு எந்த மாநிலத்திலும் தமிழகம்போல ஆளுநருக்கு எதிரான மனநிலை இல்லை. இங்குதான் அதிகம் காணப்படுவதால் முதல்வர் வெர்சஸ் ஆளுநர் என்ற போட்டியை நாங்கள் மையப்படுத்திவருகிறோம். இதன் மூலம் ஆளுநரையும் நாங்கள் பாதுகாத்ததுபோலவும் ஆச்சு, கட்சியையும் லைம்லைட்டிலேயே வைத்துக்கொண்டதுபோலவும் ஆச்சு" என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism