Published:Updated:

`பாஷா பாய்' ரஜினியின் `போக்கு' - பா.ஜ.க-வைப் பதறவைக்கும் நகர்வா, நாடகமா?

ரஜினி
ரஜினி

சமீபகாலமாகவே பா.ஜ.க-வுக்கு ஆதரவான நபராக ரஜினியை உருவகித்து செய்திகள் வந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பினர்களின் சந்திப்பும் அதற்கு ரஜினியின் ரியாக்‌ஷனும் தமிழக அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளன.

'அன்பும், ஒற்றுமையும், அமைதியுமே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட, என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்' - இஸ்லாமிய மதகுரு அமைப்பான ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்புக்குப் பிறகு இப்படி ட்வீட் செய்திருந்தார் ரஜினிகாந்த்.

சமீபகாலமாகவே பா.ஜ.க-வுக்கு ஆதரவான நபராக ரஜினியை உருவகித்து செய்திகள் வந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பினர்களின் சந்திப்பும் அதற்கு ரஜினியின் ரியாக்‌ஷனும் தமிழக அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளன.

பிப்ரவரி 29-ம் தேதி ரஜினி தரப்பிலிருந்து இஸ்லாமிய மதகுருமார்களைச் சந்திக்கலாம் என திட்டமிடப்பட்டது. கராத்தே தியாகராஜன்மூலம் இஸ்லாமிய குருமார்கள் தரப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 1-ம் தேதியன்று ஜமா அத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் ஐந்து பேர் ரஜினி வீட்டுக்கு வந்தனர். அந்தச் சந்திப்பின்போது, ''இந்திய நாட்டின் மக்கள்தொகை 130 கோடி ஆகிவிட்டது. இதில் வேறு நாட்டினர் நம் நாட்டுக்குள் வந்தால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனாலேயே அந்தச் சட்டத்தை ஆதரித்தேன்'' என்று ரஜினி சொல்லியிருக்கிறார்.

இதுவும் பா.ஜ.க - ரஜினி இருவரும் பேசிவைத்து நடத்தும் உள்ளே வெளியே நாடகமே! தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த மாதிரி அரசியல் சரிப்பட்டுவரும் என்று பா.ஜ.க இன்னமும் தெளிவானதொரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறது.

அப்போது இஸ்லாமிய அமைப்பினர், ''சி.ஏ.ஏ-வில் இஸ்லாமியர்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் முஸ்லிம்களைத் தவிர்த்து பிற சமூகங்களுக்கு மட்டும் குடியுரிமை உண்டு எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மதரீதியான உள்நோக்கம் உள்ளது'' என்று ரஜினியிடம் விளக்கியிருக்கின்றனர். அதற்கு ரஜினி தரப்பில், ''சி.ஏ.ஏ விவகாரத்தில் உங்கள் தரப்பு வாதங்கள் இப்போதுதான் புரிகின்றன. இனி இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் ஆக்கபூர்வமான காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். என்னால் என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாகச் செய்வேன்'' என்று உறுதியளித்துள்ளார்.

இந்த விஷயத்தைவைத்து, ''பா.ஜ.க-வுக்கு ரஜினி கிலி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். உண்மையில் தமிழக அரசியல் களத்துக்கு ரஜினியைக் கொண்டுவர வேண்டும் என்பதில் பா.ஜ.க தரப்புதான் ஆரம்பம் முதலே ஆர்வமாக இருந்தது. ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பினர் ரஜினியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தனர். இந்த நிலையில்தான், டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்துப் பேசி பா.ஜ.க-வினருக்கு முதல் ஷாக் கொடுத்தார் ரஜினி. அடுத்த இரண்டொரு நாள்களிலேயே முஸ்லிம் மதகுருமார்கள் சந்திப்பு நடந்திருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்பட முடியாது என்பதை அந்தக் கட்சிக்கு சூசகமாகத் தெரிவித்து விட்டார்" என்று ஒரு தரப்பினர் பா.ஜ.க-வைப் பதறவைக்க முயல்கின்றனர்.

`பாஷா பாய்' ரஜினியின் `போக்கு' - பா.ஜ.க-வைப் பதறவைக்கும் நகர்வா, நாடகமா?

அதேசமயம், "இதுவும் பா.ஜ.க - ரஜினி இருவரும் பேசிவைத்து நடத்தும் உள்ளே வெளியே நாடகமே! தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த மாதிரி அரசியல் சரிப்பட்டுவரும் என்று பா.ஜ.க இன்னமும் தெளிவானதொரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறது. பற்பல மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்திப் பார்க்கிறது. அந்த வகையில் இதுவும் ஒரு புது முயற்சியே" என்று மற்றொரு தரப்பினர் சொல்லிச் சிரிக்கிறார்கள். இதற்கிடையே ரஜியுடன் அணி சேரும் கட்சிகளின் பட்டியல் குறித்த தகவல்களும் தினமும் பரவிவருகின்றன. பா.ம.க தரப்பு கிட்டத்தட்ட பச்சைக்கொடி காட்டிவிட்டது என்கிறார்கள். காங்கிரஸ் தரப்பிலும் சிலர் பேசிவருகின்றனர்.

- இந்தச் சந்திப்பும் இதன் அரசியல் பின்ணியும் இத்துடன் முடியவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. அந்த வகையில், ரஜினியைச் சுற்றி என்ன நடக்கிறது? கமலின் 'கணக்கு' என்ன? ஸ்டாலினுக்கு செக்கா? - இப்படி பல கேள்விகளையும் பின்புல அரசியலையும் விவரிக்கும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > ரஜினியின் 'பாச்சா' பலிக்குமா? https://www.vikatan.com/government-and-politics/politics/present-political-status-of-rajinikanth

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு