Published:Updated:

`இவர்கள்தான் உண்மையான துக்டே துக்டே கும்பல்!’ - எச்சரிக்கும் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்தியா செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்துள்ளது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 இடங்களை இழந்ததுள்ளது தொடர்புப்படுத்தி சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு 2019-ம் ஆண்டு ஜனநாயகக் குறியீடு நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

165 நாடுகளின் அரசியல் அமைப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. இதில் இந்தியா 10 இடங்கள் பின் தங்கியுள்ளது. காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற உள்நாட்டு விவகாரங்களால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா 2018-ல் இந்தக் குறியீட்டில் 7.23 என்று இருந்தது 2019-ல் 6.90 என்று பின்னடைவு கண்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பதிவில், ``ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 10 இடங்களை இழந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு ஜனநாயகம் அழிக்கப்பட்டு அதன் அமைப்புகள் பவவீனமடைந்துள்ளன என்பது தெரியும்.

இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் உண்மையான துக்டே துக்டே கும்பல். இந்தியா செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்துள்ளது. தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியரும் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு