Published:Updated:

எடப்பாடி to சீமான் Via ஹெச்.ராஜா... சோஷியல் மீடியா அட்மின்கள் யார் யார்?

சமீபகாலமாக ரஜினியே நேரடியாக ட்விட்டரில் டைப் செய்து பதிவேற்றம் செய்வதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சோஷியல் மீடியா
சோஷியல் மீடியா

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாமல் இன்று அரசியல் செய்யவே முடியாது என்கிற நிலையை அனைத்துத் தலைவர்களுமே நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் தலைவர்களின் பி.ஏ-க்களுக்கு இருந்த மரியாதை, இப்போது அந்தத் தலைவர்களின் அட்மின்களுக்கும் இருக்கிறது. தமிழகத் தலைவர்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் அட்மின்கள் யார் யார் என்ற விசாரணையில் இறங்கினோம். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2PgnEIb

எடப்பாடி பழனிசாமி:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில்தான் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக அ.தி.மு.க-வின் ஐ.டி விங்' தனியாக நீங்கள் கணக்கு ஆரம்பித்துக் கருத்துகளை வெளியிடுங்கள்' என்று அறிவுறுத்திய பிறகே தன் பெயரில் கணக்கு ஆரம்பிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்டாலின்:

தமிழகத் தலைவர்களிலேயே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும் நபராக இருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஐந்தாண்டுகளுக்கு முன்பே சமூக வலைதளங்களில் கணக்குகளை ஆரம்பித்து இப்போது அதை அசுர வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளனர் ஸ்டாலினின் அட்மின்கள். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் ஸ்டாலினுக்குக் கணக்கு உள்ளது. இவரின் சமூக வலைதளங்களை நிர்வகிப்பது ஓ.எம்.ஜி குழு. ஸ்டாலின் பேசும் வீடியோக்கள் முதல் அவருடைய அறிக்கையை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வெளியிடுவதுவரை அனைத்தையும் இந்தக் குழுவே பார்த்துக்கொள்கிறது. உடனடியாக பதில் அளிக்கவேண்டிய கருத்துகளை ஸ்டாலினின் உதவியாளர் தினேஷ் ட்விட்டர் மூலம் பதிவிடுகிறார்.

சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியுமே கட்சியை வளர்க்கமுடியும் என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியது நாம் தமிழர் கட்சிதான்

ரஜினி:

ரஜினி ஏதாவது ஒரு டயலாக் விட்டாலே அது இரண்டு நாள்களுக்கு மீடியாக்களுக்குப் பெரும் தீனியாகிவிடும். அதேபோல அவர் ஏதாவது ட்விட்டரில் பதிவிடுகிறாரா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் எப்போதும் கண்விழித்துக் காத்துக்கொண்டிருக்கும். அவர் யாரையாவது வாழ்த்தினாலும் விமர்சித்தாலும் அதுவே அன்றைக்கு செய்தித் தொலைக்காட்சிகளுக்கான விவாதப்பொருளாகிவிடும். அவர் ட்விட்டரில் பதிவிட்ட பல விஷயங்கள்தான், அவருக்கு பா.ஜ.க சாயம் பூசின என்பது ஊரறிந்த சேதி. அவருடைய சமூக வலைதளப் பக்கத்தைக் கவனித்துக்கொள்வது அவரின் இளைய மகள் செளந்தர்யா. சமீபகாலமாக ரஜினியே நேரடியாக ட்விட்டரில் டைப் செய்து பதிவேற்றம் செய்வதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஹெச்.ராஜா:

அட்மின் புகழ் ராஜாவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளமும் அதிகம் உண்டு. சமீபத்தில் தனியாகவே வீடியோப் பக்கம் ஒன்றையும் தொடங்கி யிருக்கிறார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், என அனைத்துத் தளங்களிலும் கலக்கிவரும் ராஜாவின் அட்மின் யார் என்பதை அறிய தமிழகமே ஆர்வமாய் இருந்திருக்கிறது. அவரின் ஒட்டுமொத்த சமூக வலைதளப் பக்கங்களையும் ஒரு டீமே நிர்வகிக்கிறது. அதை மேற்பார்வையிடுவது ராஜாவின் மருமகன் சூர்யா.

எடப்பாடி to சீமான் Via ஹெச்.ராஜா... சோஷியல் மீடியா அட்மின்கள் யார் யார்?

சீமான்:

சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியுமே கட்சியை வளர்க்கமுடியும் என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியது நாம் தமிழர் கட்சிதான். யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து விதமான சமூக ஊடகங்களிலும் சீமானின் தம்பிகள் சடுகுடு ஆடுகிறார்கள். சீமானின் பேச்சுகளை யூடியூபில் பதிவிடுவது, ஃபேஸ்புக்கில் வீடியோ போடுவது, ட்விட்டரில் கருத்துப்பதிவேற்றம் செய்வது என்று சகலத்தையும் நிர்வாகிப்பது ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் பாக்கியராசன்.சே என்பவர். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த இவரே சீமானின் ஆதர்ச அட்மினாக இருந்துவருகிறார்.

- இவர்களுடன் ஓ.பி.எஸ், வைகோ, டி.டி.வி.தினகரன், திருமாவளவன், கமல் மற்றும் ராமதாஸ் ஆகியோரது அட்மின்களின் பின்புலத்தை முழுமையாக ஆனந்த விகடன் சிறப்புப் பார்வையில் அறிய > அட்மின் அரசியல் தர்பார்! https://www.vikatan.com/news/politics/social-media-admin-details-of-tn-politicians

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |