Published:Updated:

"சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் யார் யார்?" - சூடுபிடிக்கும் தலைநகரம்

சென்னை மாநகராட்சி மேயர் ரேஸ்

சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கான ரேஸிலிருக்கும் இருவருக்குமே வயது 30-க்கு கீழ்தான். அதனால், அனுபவம் வாய்ந்தவர்களை துணை மேயராக்கிட தலைமை முடிவெடுத்திருப்பதால், அதை எட்டிப் பிடிப்பதற்குத்தான் போட்டி கடுமையாகியிருக்கிறது!

"சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் யார் யார்?" - சூடுபிடிக்கும் தலைநகரம்

சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கான ரேஸிலிருக்கும் இருவருக்குமே வயது 30-க்கு கீழ்தான். அதனால், அனுபவம் வாய்ந்தவர்களை துணை மேயராக்கிட தலைமை முடிவெடுத்திருப்பதால், அதை எட்டிப் பிடிப்பதற்குத்தான் போட்டி கடுமையாகியிருக்கிறது!

Published:Updated:
சென்னை மாநகராட்சி மேயர் ரேஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இன்று கவுன்சிலர்களாகப் பதவியேற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சிகளுள் ஒன்றான சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை அலங்கரிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஶ்ரீதனி
ஶ்ரீதனி
ப்ரியா ராஜன்
ப்ரியா ராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில், தி.மு.க கூட்டணி 178 வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது. அ.தி.மு.க 15 இடங்களையும், அ.ம.மு.க., பா.ஜ.க கட்சிகள் தலா ஒரு வார்டையும் கைப்பற்றியிருக்கின்றன. ஐந்து வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு, தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க இருப்பதால், 'அடுத்த மேயர், துணை மேயர் யார்?' என்கிற ரேஸ் தி.மு.க-வுக்குள் களைக்கட்டியிருக்கிறது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி, பட்டியலினப் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 1957-ல் தாரா செரியன் என்பவரும், 1971-ல் காமாட்சி என்பவரும் சென்னை மேயராக பொறுப்பேற்றிருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு எந்தப் பெண்ணும் சென்னை மேயர் பதவியைப் பிடித்ததில்லை. குறிப்பாக, பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை மேயராக அமரும்பட்சத்தில், அதுவே முதன்முறை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலரிடம் பேசினோம். "மேயர் ரேஸில், சென்னை மாநகராட்சியின் 17-வது வார்டில் போட்டியிட்ட கவிதா நாராயணன் என்பவரும் இருந்தார். ஆனால், கட்சி உள்ளடி வேலைகளால் கவிதா தோற்கடிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம், கவிதாவின் கணவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான புழல் நாராயணன் நே,ரடியாகவே புகாரளிக்கவும், சென்னை தி.மு.க-வில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த உள்ளடி அரசியலை விசாரித்து நடவடிக்கையெடுக்க விரைவில் குழு ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது. போட்டியிலிருந்து கவிதா விலகியிருப்பதால், மேயர் பதவிக்கான போட்டியில் 70-வது வார்டு கவுன்சிலர் ஶ்ரீதனியின் பெயர் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது. அதேவேளையில், முன்னாள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் மகள் ப்ரியா ராஜன் 74-வது வார்டில் தி.மு.க கவுன்சிலராக வெற்றிபெற்றிருக்கிறார். அவர் பெயரும் மேயர் பதவிக்கான பரிசீலினையில் இருக்கிறது. ரேஸிலிருக்கும் இந்த இருவருக்குமே வயது 30-க்கு கீழ்தான்.

அதனால், அனுபவம் வாய்ந்தவர்களை துணை மேயராக்கிட தலைமை முடிவெடுத்திருப்பதால், துணை மேயர் பதவியை எட்டிப் பிடிப்பதற்குத்தான் போட்டி கடுமையாகியிருக்கிறது.

சிற்றரசு
சிற்றரசு

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், 49-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள இளைய அருணா, 169-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள சைதை மகேஷ் குமார் ஆகியோர் துணை மேயர் பதவிக்கு முட்டி மோதுகிறார்கள். இவர்களில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான சிற்றரசுவின் கை ஓங்கியிருக்கிறது. துணை மேயர் பதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு மண்டலக்குழுத் தலைவர் பொறுப்பு அளிக்கப்படவுள்ளது" என்றனர்.

தலைநகரின் மேயர், துணை மேயர் பதவி என்பதால், அந்தப் பதவிகளுக்குரிய நபர்களை கவனமாகத் தேர்வுசெய்யச் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேயர் பதவிக்கான நபரை அமைச்சர் சேகர் பாபுவும், துணை மேயர் பதவிக்கானவரை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தேர்வு செய்யவிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்த கட்சி வட்டாரத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism