Published:Updated:

கும்பகோணம்: மேயருக்காக தலைமைக்கு ரூட் பிடிக்கும் உறுப்பினர்கள்... யாரை `டிக்’ அடிப்பார் ஸ்டாலின்?!

கும்பகோணம்: மேயர் ரேஸ்

`கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயருக்கான வாய்ப்பை எனக்குக் கொடுங்க’ என்று தமிழழகன் நேரடியாக ஸ்டாலினிடமே கேட்க, புன்னகைத்து அனுப்பிவைக்கப்பட்டாராம். மேயர் ரேஸில் முன்னணியில் தானே இருப்பதாகக் கருதுவதால் எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக இருக்கிறார்.

கும்பகோணம்: மேயருக்காக தலைமைக்கு ரூட் பிடிக்கும் உறுப்பினர்கள்... யாரை `டிக்’ அடிப்பார் ஸ்டாலின்?!

`கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயருக்கான வாய்ப்பை எனக்குக் கொடுங்க’ என்று தமிழழகன் நேரடியாக ஸ்டாலினிடமே கேட்க, புன்னகைத்து அனுப்பிவைக்கப்பட்டாராம். மேயர் ரேஸில் முன்னணியில் தானே இருப்பதாகக் கருதுவதால் எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக இருக்கிறார்.

Published:Updated:
கும்பகோணம்: மேயர் ரேஸ்

கும்பகோணம் `கோயில் நகரம்’ என்று அழைக்கப்படுவதுடன் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறக்கூடிய சிறப்புமிக்க நகரமாகவும் இருந்துவருகிறது. நகராட்சியாக இருந்த கும்பகோணம் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்று முதல் மேயர் பதவியைக் கைப்பற்ற உள்ளது. கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயராகப் பதவியேற்றுவிட வேண்டும் என அக்கட்சியில் வெற்றிபெற்ற முக்கிய நிர்வாகிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவிவருகிறது.

கும்பகோணம் 
மாநகராட்சி தேர்தலில் வென்ற அசோக்குமார்
கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் வென்ற அசோக்குமார்

கும்பகோணம் நகராட்சி 156 ஆண்டு பழைமையானது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர். இதற்காகப் போராட்டமும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கபடும் எனப் பலரும் காத்திருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நகராட்சியான கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து முதல் தேர்தலைச் சந்தித்த நிலையில், தற்போது முதல் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது. 45 வார்டுகளுடன் இருந்த கும்பகோணம், மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகு வார்டு மறு சீரமைப்பு செய்யப்பட்டு 48 வார்டுகளைக்கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

குட்டி என்கிற தெட்சிணாமூர்த்தி
குட்டி என்கிற தெட்சிணாமூர்த்தி

கும்பகோணம் நகராட்சி கடந்த முறை அதிமுக வசம் இருந்தது அக்கட்சியைச் சேர்ந்த ரத்னா சேகர் நகர்மன்றத் தலைவராக இருந்தார். தற்போது திமுக 37 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 5 வார்டுகளிலும் வெற்றிபெற்று 42 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்துள்ளது. அதிமுக மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றியதால், மேயரைப் பிடிப்பதற்கான முயற்சியைக்கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக-வைச் சேர்ந்த ஒருவரே கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகப் பொறுப்பேற்று அலங்கரிக்கப்போகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யார் மேயர் வேட்பாளர் என்பதைச் சொல்லாமல், திமுக தலைமை மெளனம் காத்துவருவது சஸ்பென்ஸை அதிக்கப்படுத்தியிருந்தாலும், எப்படியாவது மேயர் சீட்டைப் பிடித்து விட வேண்டும் எனப் பலர், தலைமையிலுள்ள தங்களுக்குத் தெரிந்த முக்கியஸ்தர்கள் மூலமாக ரூட் எடுத்து முயன்றுவருவதால் திமுக-வுக்குள்ளேயே கடும் போட்டி நிலவிவருகிறது.ரேஸில் முந்துவார், மேயர் சீட்டை எட்டிப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து விவரம் அறிந்த வட்டாரங்களில் பேசினோம்.

வர்ஷா அழகேசன்
வர்ஷா அழகேசன்

முன்னாள் நகர்மன்றத் தலைவரும், திமுக-வில் கும்பகோணம் மாநகரச் செயலாளருமான சு.ப.தமிழழகன், கும்பகோணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அசோக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான குட்டி என்கிற தெட்சிணாமூர்த்தி ஆகியோரிடையே மேயர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவிவருகிறது.

தமிழழகனின் அம்மா மதுரம் பத்மநாபன் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். அதேபோல் தமிழழகனும் நகர்மன்றத் தலைவராகப் பொறுப்புவகித்தவர் என்றாலும், எந்த கரப்ஷனிலும் அவரது குடும்பத்தின் பெயர் அடிபட்டதில்லை.

எளிமையான, எளிதாகக் பழகக்கூடிய நபர் என தமிழழகனுக்கு திமுக-வினரே சர்டிஃபிகேட் தருகிறார்கள். கட்சிக்குள் எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும் அதற்குள் சிக்காமல் தான் எப்பவுமே தலைமையின் பக்கம் என்று ஸ்டாலின் பின்னால் நிற்பவர். அடாவடிக்குச் செல்லாதவர். பெரிய பஞ்சாயத்து எதிலும் சிக்காதவர் என்பதால் ஸ்டாலின் குட்புக்கில் இடம்பிடித்திருப்பவர். கும்பகோணம் நகரத்தை முழுமையாக அறிந்துவைத்திருப்பதால், `மாநகராட்சியைத் திறம்பட நடத்துவேன். முதல் மேயருக்கான வாய்ப்பை எனக்குக் கொடுங்க’ என்று தமிழழகன் நேரடியாக ஸ்டாலினிடமே கேட்க, புன்னகைத்து அனுப்பிவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேயர் ரேஸில் முன்னணியில் தான் இருப்பதாகக் கருதும் தமிழழகன், எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக வலம்வருகிறார்.

சு.ப.தமிழழகன்
சு.ப.தமிழழகன்

அசோக்குமாரின் மனைவி காயத்திரி கும்பகோணம் யூனியன் சேர்மனாக இருக்கிறார். மேயர் கனவுடன் இருக்கும் அசோக்குமார் ஊராட்சிப் பகுதியில் இருந்த தனது ஓட்டை தாராசுரத்துக்கு மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார். திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கல்யாணசுந்தரத்தின் தீவிரமான ஆதரவாளர். தன் சமூகமான கள்ளர் சமூகத்தை ச்சேர்ந்தவர் என்பதால் அசோக்குமாருக்கு, கல்யாணசுந்தரம் கடுமையாக சப்போர்ட் செய்கிறார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் கொடிகட்டிப் பறப்பதால் பசையான பார்டியாகவும் வலம்வருகிறார்.

ஒரு முறை உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் வந்தபோது தாராசுரத்தில் அசோக்குமார் கொடுத்த வரவேற்பைப் பார்த்து உதயநிதி மட்டுமல்ல, அனைத்து நிர்வாகிகளும் வியந்துபோனார்களாம். கட்சிக்காக நிறைய செலவு செய்யக்கூடியவர். எப்படியாவது மேயர் சீட்டில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். கல்யாணசுந்தரத்தின் உதவியுடன் ஸ்டாலின் மனதை தட்டிக்கொண்டிருக்கிறார். அதிமுக-விலிருந்து வந்தவர், கொரோனா முதல் லாக்டெளன் நேரத்தில் கும்பகோணம் யூனியனில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல், மனைவி யூனியன் சேர்மனாக இருப்பது போன்றவை இவருக்கு மைனஸ் அம்புகளாக வந்து நின்றாலும் அதையெல்லாம் உடைத்துவிட்டு முன்னேறப் பார்க்கிறார்.

அசோக்குமார்
அசோக்குமார்

வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் குட்டி என்கிற தெட்சிணாமூர்த்தி ஏற்கெனவே மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர். உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நெருக்கமாக இருப்பவர். ஆளுக்குத் தகுந்தாரற்போல் நடிக்காமல் தனக்கு சரி என்று பட்டதைச் செய்து பேசக்கூடியவர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, `குட்டிக்கு ஏதாவது செய்யணும்’ என உதயநிதியிடம் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டாலின் குடும்பத்துடன் நெருக்கமான நட்பில் இருந்துவருவதால் கிச்சன் கேபினட் ஆதரவையும் பெறுவதற்கு முயல்வதுடன், தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வலம் வருகிறார்.

மாநகரப் பொருளாளராக இருக்கும் சோடா.கிருஷ்ணமூர்த்தி, மூன்று முறை கவுன்சிலராக இருந்தவர். கட்சியிலும், நகர் மன்றத்திலும் சீனியர். தனக்கு துணை மேயர் வேண்டும் என்கிறார்.

உதயநிதி ரசிகர் மன்றத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரான அழகேசன், தன் மனைவி வர்ஷாவைப் போட்டியிட வைத்து வெற்றிகண்டுள்ளார். தேர்தலில் போட்டியிட சீட்டையே பெரிய அளவில் சிபாரிசு செய்து பெற்ற வர்ஷா அழகேசன், தான் போட்டியிட்ட 18-வது வார்டில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக வென்றுள்ளதைத் தன்னுடைய பிளஸ்ஸாகச் சொல்லி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மூலமாக துணை மேயர் கேட்டுவருகிறார். ஆசைத்தம்பி என்பவரும் துணை மேயர் ரேஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி என்கிற தெட்சிணாமூர்த்தி
குட்டி என்கிற தெட்சிணாமூர்த்தி

கும்பகோணம் மாநகராட்சியைப் பொறுத்தவரை சு.ப.தமிழழகனுக்கு தலைமையின் ஆசி இருப்பதுடன், அவரது பெயரை ஸ்டாலின் `டிக்’ செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட லோக்கல் நிர்வாகிகளின் ஆதரவும் இருப்பதால் தமிழழகனே மேயர் ரேஸில் முந்துவதுடன், முதல் மேயராக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதகமிருப்பதாகவே கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism