Published:Updated:

பீகார்: அதிக இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க; அடுத்த முதல்வர் யார்? - இன்று முக்கிய முடிவு

பீகார் தேர்தல்
பீகார் தேர்தல்

ஐக்கிய ஜனதா தளம் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வைவிட 31 எம்.எல்.ஏ-க்களைக் குறைவாகப் பெற்றிருந்தாலும், தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்தான் முதல்வராவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல், பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்தான். அம்மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க 74 இடங்களில் வென்று, மாநிலத்தில் இரண்டாவது தனிப்பெரும் கட்சியாகியிருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

ஐக்கிய ஜனதா தளம் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வைவிட 31 எம்.எல்.ஏ-க்களைக் குறைவாகப் பெற்றிருந்தாலும், தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்தான் முதல்வராவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போதைய நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியைக் கலைக்க அமைச்சரவை முடிவு செய்து, அதற்கான கடிதமும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நிதிஷ் குமாரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதல் மந்திரியாக நீடிக்குமாறு நிதிஷ் குமாரைக் கேட்டுக்கொண்டார்.

மிஸ்டர் கழுகு: பீகார் ரிசல்ட் எதிரொலி... காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க!

இந்தநிலையில், பாட்னாவில் நிதிஷ் குமார் இல்லத்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை பா.ஜ.க கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு நடக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ-க்கள் இணைந்து முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

நிதிஷ் குமார், பீகார்
நிதிஷ் குமார், பீகார்
Facebook/Nitish Kumar

நிதிஷ்குமார் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமார், ``நவம்பர் 15-ம் தேதி (இன்று) கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றார்.

பீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்;  ராம்காரில் 189 வாக்குகள்! - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா?
அடுத்த கட்டுரைக்கு