Published:Updated:

பா.ஜ.க வாக்கு வங்கியில் 2-வது வகையினர் கழன்றுபோவது ஏன்?

பா.ஜ.க-வின் வாக்கு வங்கியில் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கிறது. ஒன்று, இந்துத்துவ ஆதரவாளர்கள் கூட்டம். இன்னொரு கூட்டம் கொஞ்சம் கலவையானது.

பா.ஜ.க
பா.ஜ.க

சில மாதங்களுக்கு முன்புவரை 'காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என பா.ஜ.க முழங்கிக்கொண்டிருந்தது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை பா.ஜ.க தனியாகவோ, கூட்டணி அமைத்தோ ஆள்வதைச் சுட்டிக்காட்டி, முக்கால்வாசி இந்தியாவே காவி வண்ணத்தில் இருக்கும் வரைபடம் ஒன்று பெருமிதத்துடன் ஷேர் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா ஆட்சியை பா.ஜ.க இழந்திருக்கும் இந்த நேரத்தில், ஆங்காங்கே காவி வண்ணம் இருக்கும் ஒரு தேசப்படம் வைரல் ஆகிறது. 'பா.ஜ.க-வின் செல்வாக்கு சரிந்துவிட்டது’ என அது சுட்டிக் காட்டுகிறது. மோடி எதிர்ப்பாளர்களால் அந்தப் படம் ஆர்வத்துடன் பகிரப்படுகிறது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது மகாராஷ்டிராவை இழந்திருக்கிறது. எனவே, இப்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்திருக்கிறது. இவற்றில் ஏழு, வடகிழக்கில் உள்ள குட்டி மாநிலங்கள். உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஜார்கண்ட் ஆகியவை மட்டுமே பெரிய மாநிலங்கள்.

வரலாறுகள் பல சமயங்களில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே எழுதப்படுகின்றன. மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சில தவறுகளே பா.ஜ.க-வுக்குப் புது உத்வேகத்தைக் கொடுத்தன.

பா.ஜ.க இழந்தவை எல்லாமே பரப்பிலும் மக்கள்தொகையிலும் பெரிய மாநிலங்கள். அதனாலேயே இழப்பு மிகப் பெரியதாகத் தெரிகிறது. இடையில் மிசோரம் என்ற சிறிய மாநிலம் ஒன்றில் அது ஆளும் கூட்டணியில் இடம் பிடித்தது. ஆனால், அது தேச வரைபடத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. மகாராஷ்டிராவும் பெரிய மாநிலம் என்பதால், சட்டெனக் காவியின் நிறம் மங்கிவிட்டது. இப்போது 12 மாநிலங்களை மட்டுமே பா.ஜ.க முதல்வர்கள் ஆள்கிறார்கள். பா.ஜ.க அதன் உச்சத்தில் இந்தியாவின் 71 சதவிகித நிலப்பரப்பை ஆட்சி செய்தது. இப்போது அதன் வசம் இருப்பது 40 சதவிகிதம் மட்டுமே! என்றாலும், இந்தியாவிலேயே அதிக எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட கட்சி அதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பிருந்து, இந்த ஓராண்டுக் காலத்துக்குள் இப்படி மாற்றங்கள் நிகழ்ந்தன. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் மோடி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இப்போதைய ஜார்கண்ட், கர்நாடகா சஸ்பென்ஸ் தவிர, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வேறு தேர்தல்கள் இல்லை என்பது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பெரும் ஆறுதலாக இருக்கும். டெல்லியிலும் பீகாரிலும் அடுத்த ஆண்டுதான் தேர்தல் வருகிறது.

இதற்கு முன்பும்கூட மோடியின் வசீகரத்தை மீறி பா.ஜ.க தோற்றிருக்கிறது. டெல்லியில் தோல்வி கிடைத்தது. பஞ்சாப்பில் கிடைத்தது. பீகாரில் கிடைத்தது. ஆனால், அந்தத் தோல்விகள் பெரும் விவாதத்துக்கு உள்ளானதில்லை. இப்போது பா.ஜ.க-வின் நடவடிக்கைகளுடன் இந்தத் தோல்விகளைத் தொடர்புபடுத்தியே விவாதம் எழுகிறது.

பா.ஜ.க-வின் வாக்கு வங்கியில் இரண்டு விதமான மக்கள் கூட்டம் இருக்கிறது. ஒன்று, இந்துத்துவ ஆதரவாளர்கள் கூட்டம். இன்னொரு கூட்டம் கொஞ்சம் கலவையானது. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்து 'பா.ஜ.க வித்தியாசமான கட்சி’ என்று நினைப்பவர்கள், நரேந்திர மோடி சராசரி அரசியல்வாதி கிடையாது என்று நம்புகிறவர்கள், இந்திய அரசியலில் பா.ஜ.க ஒரு மாற்றத்தை நிகழ்த்தப்போகிறது என்று எதிர்பார்ப்பு கொண்டவர்கள் ஆகியோரைக் கொண்டது இந்த இரண்டாவது கூட்டம்.

இதில் இந்துத்துவர்களுக்கு எப்போதும் பிரச்னை இல்லை. பா.ஜ.க ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ... மோடியின் அதிரடிகள் நல்ல விளைவைத் தருகிறதோ, மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறதோ... எதைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை. 'இந்தியாவே சுபிட்சமாக இருக்கிறது’ என்று ஃபார்வேர்டு மெசேஜ்களையும் ஃபோட்டோஷாப் மாயைகளையும் நம்பியபடி அவர்களால் வாழ்ந்துவிட முடியும். இன்னொரு கோஷ்டிக்குத்தான் ஏராளமான கேள்விகள் எழுகின்றன. > அவற்றில் சில இங்கே... https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-bjps-growth

பா.ஜ.க வாக்கு வங்கியில் 2-வது வகையினர் கழன்றுபோவது ஏன்?

சமீபத்திய தோல்விகள், விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளின் புறக்கணிப்பு ஆகியவை உடனடியாக பா.ஜ.க-வை பலவீனப்படுத்தப் போவதில்லை. இந்த பலவீனங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலும் எதிர்க்கட்சிகள் இல்லை. 'கர்நாடகாவில் தங்கள் கூட்டணி ஆட்சியை வீழ்த்திய பா.ஜ.க, 15 தொகுதி இடைத்தேர்தலில் வென்றுவிடக் கூடாது’ என காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முனைப்பு காட்டவில்லை. அவை தனித்தனியே மோதுகின்றன. இதேபோல ஜார்கண்டிலும் காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தில் உள்ளது.

என்றாலும், வரலாறுகள் பல சமயங்களில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியே எழுதப்படுகின்றன. மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சில தவறுகளே பா.ஜ.க-வுக்குப் புது உத்வேகத்தைக் கொடுத்தன. பா.ஜ.க இப்போதுதான் அப்படித் தவறுகள் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

மாநில சட்டசபைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் தேசியக் கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை. கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவு டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. ஆனால் அதை அச்சத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது பா.ஜ.க. நூலிழை மெஜாரிட்டியில் முதல்வர் எடியூரப்பாவின் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. அதை உறுதி செய்ய அங்கு வெற்றி அவசியம்.

ஜார்கண்ட் என்ற குட்டி மாநிலத்தின் தேர்தல் முடிவு பற்றிப் பொதுவாக தேசிய அளவில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், இப்போது நடைபெறும் ஜார்கண்ட் தேர்தல் முடிவுக்காக, பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் நகத்தைக் கடித்தபடி பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள். வெறும் 81 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட ஜார்கண்டை, இப்போது தங்கள் ஆட்சியில் இருக்கும் பெரிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதுகிறது பா.ஜ.க. இதுவும் கைநழுவிப் போனால் அவமானம்தான்.

ஏனெனில்... - முழுமையான அரசியல் அலசல் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > தேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க? https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-bjps-growth

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |