Published:Updated:

மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாயும் பன்னீர்செல்வம்... திட்டம் என்ன?

எடப்பாடிக்கு சட்டரீதியாகச் சிக்கல் வந்தால், அன்று கட்சியின் முழுக் கட்டுப்பாடும் தன் கைக்குள் வந்துவிடும். எதற்குத் தேவையில்லாமல் சசிகலா பக்கம் சாய வேண்டும் என்கிற எண்ணமும் பன்னீரிடம் உள்ளது

``சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர் மாறிவருகிறார்” என்று செய்திகள் பரவிவந்த நிலையில், நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்து மீண்டும் பழனிசாமி பக்கம் சாய்ந்திருக்கிறார் பன்னீர்.

சசிகலா, பன்னீர்
சசிகலா, பன்னீர்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்தன. சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற குரல்கள் எழுந்தன. அதற்குத் தோதாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், ``கட்சியின் தலைமை சசிகலாவைக் கட்சிக்குள் இணைப்பது குறித்து முடிவெடுக்கும்” என்றது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சசிகலாவைக் கட்சிக்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தீவிரமாக இருந்தனர். அவர்கள் பன்னீர் தரப்பிடம், `சசிகலாவுக்கு ஆதரவான நிலையில் இருந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கே சிக்கல் வந்துவிடும்’ என்று சொன்னதாகத் தெரிகிறது.

குறிப்பாக, டிசம்பர் மாத இறுதியில் அ.தி.மு.க-வின் பொதுக்குழுவைக் கூட்டும் மூடில் எடப்பாடி இருக்கிறார். இன்றைய நிலையில் பொதுக்குழுவில் எடப்பாடிக்கு ஆதரவான நபர்களே அதிகம் இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவான நிலையில் இருந்தால், பொதுக்குழுக் கூட்டத்தில் பன்னீருக்கு செக் வைக்க எடப்பாடி தரப்பு தயாராக இருந்தது. மற்றொருபுறம் டெல்லி தரப்பின் கண்ணசைவும் பன்னீரை யோசிக்கவைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க - பன்னீர் - எடப்பாடி
அ.தி.மு.க - பன்னீர் - எடப்பாடி

பன்னீரை நன்கு அறிந்தவர்களிடம் இது குறித்துக் கேட்டால், ``அ.தி.மு.க -வின் தலைவராக பன்னீர்செல்வம் இருந்தாலும், அவர் எந்த முடிவையும் டெல்லி பாஜக தலைமையின் ஆலோசனைப்படியே எடுத்துவருகிறார். சசிகலா விவகாரத்தில் ஆரம்பம் முதலே மோடி எதிர்ப்பு நிலையிலேயே இருந்துவருகிறார். இப்போதும் அந்த நிலையில் மாற்றம் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பன்னீ்ர், சசிகலா பக்கம் சாய ஆரம்பித்ததுமே எடப்பாடி தரப்பு டெல்லிக்கு வேறு மாதிரியாக சில தகவல்களை பாஸ் செய்தது. அதனால் டெல்லி தரப்பு உஷாராகி, பன்னீரிடம் இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது. இதன் பிறகே பன்னீர், பழனிசாமியுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்” என்கிறார்கள்.

எடப்பாடி -பன்னீர்- மோடி
எடப்பாடி -பன்னீர்- மோடி

மற்றொரு புறமோ, ``பன்னீரின் இந்த அமைதிக்குக் காரணமே, எடப்பாடி மீதான வழக்குதான். ஒருவேளை எடப்பாடிக்கு சட்டரீதியாக சிக்கல் வந்தால், அன்று கட்சியின் முழுக்கட்டுப்பாடும் தன் கைக்குள் வந்துவிடும். எதற்குத் தேவையில்லாமல் சசிகலா பக்கம் சாய்ந்து அவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்கிற நினைப்பிலும் அவர் இருக்கிறார்” என்கிறார்கள்.

பன்னீரின் அரசியல் அவருக்கு மட்டுமே தெரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு