Published:Updated:

`துருவேறிப் போய்கிட்டே இருக்கோம்...' வருந்தும் நிர்வாகிகள் - என்ன நடக்கிறது அமமுக-வில்?

அமமுக அலுவலகம்

``அறிக்கைகளும் டிவிட்டர்'ல கருத்துகளும் மட்டுமே போதும்'னு நினைக்கிறாரு தினகரன். ஆனால், கீழ்மட்ட அளவுல அப்படி அரசியல் செய்யமுடியாது'' என்கிற ஆதங்கத்தோடு நம்மிடையே பேசத் தொடங்கினார்கள் அமமுக-வின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

`துருவேறிப் போய்கிட்டே இருக்கோம்...' வருந்தும் நிர்வாகிகள் - என்ன நடக்கிறது அமமுக-வில்?

``அறிக்கைகளும் டிவிட்டர்'ல கருத்துகளும் மட்டுமே போதும்'னு நினைக்கிறாரு தினகரன். ஆனால், கீழ்மட்ட அளவுல அப்படி அரசியல் செய்யமுடியாது'' என்கிற ஆதங்கத்தோடு நம்மிடையே பேசத் தொடங்கினார்கள் அமமுக-வின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

Published:Updated:
அமமுக அலுவலகம்
`` சின்னம்மாவும் எங்கத் தலைவர் தினகரனும் ஒண்ணு சேர்ந்து அதிமு-கவை மீட்பாங்க அப்படிங்குற நம்பிக்கையிலதான் நாங்ககூட இருக்கோம். ஆனா, ஆளுக்கொரு பாதையில போறோம்'னு சொல்லிட்டு, மாத்தி மாத்தி இவங்களுக்குள்ளயே முட்டுக்கட்டை போடுற வேலைகள்தான் நடக்குது. அதனாலதான் ரெண்டு பேருமே ஒரு அடிகூட முன்னேறாம இருக்காங்க. கட்சியும் சும்மா கிடக்கிற இரும்பா துருவேறிட்டு இருக்கு'' என மிகுந்த ஏமாற்றத்தோடு தங்களின் மனக்குமுறலைக் கொட்டுகிறார்கள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள்.

கடந்த 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். `அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்' என அப்போது அறிவித்தார். அந்தக் கட்சி முதன்முறையாக, கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஐந்து சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான வாக்குகளைக் கைப்பற்றியது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல், ஒன்பது மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதளபாதாளத்துக்குச் சென்றது அந்தக் கட்சியின் வாக்குவங்கி.

அ.ம.மு.க
அ.ம.மு.க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தவிர, கட்சி ஆரம்பிக்கும்போது இருந்த பல முன்னணி நிர்வாகிகள் இப்போது கட்சியில் இல்லை. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், அமைப்புச் செயலாளராக இருந்த வ.து.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், டேவிட் செல்வன், மாவட்டச் செயலாளர்கள் பொன்ராஜா, சந்தான கிருஷ்ணன், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகி தி.மு.க-விலும், அ.தி.மு.க-விலும் இணைந்தனர். ஆனாலும் கட்சியின் வளர்ச்சி குறித்து தினகரன் சிறிதும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். ``அறிக்கைகளும் டிவிட்டர்'ல கருத்துகளும் மட்டுமே போதும்'னு நினைக்கிறாரு தினகரன். ஆனால், கீழ்மட்ட அளவுல அப்படி அரசியல் செய்யமுடியாது'' என்கிற ஆதங்கத்தோடு நம்மிடையே பேசத் தொடங்கிய முன்னணி நிர்வாகிகள் சிலர்,

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இப்போ வரைக்கும் அவர் மனசுல என்ன நினைக்கிறார்'னு எங்களுக்குச் சுத்தமா தெரியல. தேர்தலுக்கு முன்னாடியும் இப்படித்தான் திடீர்னு சைலன்ட் ஆகிட்டாரு. நிர்வாகிகள் யார்கூடவும் தொடர்புலயே இல்லாம இருந்தாரு. திடீர்'னு தேர்தல்'ல போட்டியிடப் போறோம்'னு சொல்லி அறிவிப்பு வந்து நாங்களும் வேட்பாளர்களா நின்னோம். கடைசிநாள் வரை எதிர்பார்த்து, தேர்தல் செலவுக்கு கட்சியில இருந்து பணமே வரல. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னாடியும் கட்சி நிர்வாகிகளோட எந்தத் தொடர்புலயும் இல்லாமதான் இருந்தார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும் அறிக்கை வந்தது. நாங்களும் போட்டியிட்டோம். ஆனா, கடந்தமுறை இரண்டு சேர்மன் இடங்களைக் கைப்பற்றிய எங்களால இந்தமுறை ஒருசில வார்டுகளைத்தான் பிடிக்க முடிஞ்சது. இதுவரைக்கும் எங்க கைக்காசைப் போட்டுத்தான் செலவழிச்சுட்டு வர்றோம். இனிமே அப்படி செலவழிக்க எங்ககிட்ட சக்தி இல்லை. கீழ் மட்ட அளவுல நிர்வாகிகள் கூட்டம், மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டம், ஆர்ப்பாட்டம்னு இருந்தாலாவது கட்சியை உயிர்ப்போட வச்சுக்கலாம்.

தினகரன் - சசிகலா
தினகரன் - சசிகலா

ஆனா, கட்சி நிர்வாகியான எங்ககூடவே அவருக்கு சரியான தொடர்பு இல்லை. மாவட்டச் செயலாளர்களும் கீழ்மட்ட நிர்வாகிகளோட எந்தத் தொடர்பும் இல்லாம இருக்காங்க. இதுபோக, மாவட்டத்துக்குள்ளேயே இரண்டு, மூணு அணிகளா பிரிஞ்சு வேற கிடக்காங்க. தேர்தலுக்குப் பின்னாடி ரொம்ப நாள் வெளியில வராம இருந்தாரு. சின்னம்மா சுற்றுப்பயணம்'னு போகவும், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி கொரோனா அதனாலனதான் சந்திக்கலைன்னு சொன்னாரு. சின்னம்மாவை ஆதரிக்கிறதா, அவங்ககூட நிக்குறதா அப்படிங்கிற விஷயத்துலயும் கட்சி நிர்வாகிகள் நாங்க தெளிவில்லாம இருக்கோம். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்கிறாங்க. தொலைக்காட்சி விவாதங்கள்ல கலந்துக்கிறதுக்கும் எங்க கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி இல்ல. இன்னும் கொஞ்ச நாள்'ல, அ.ம.மு.க கட்சியையே மக்கள் மறந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்க தலைவர் மேல எங்களுக்கு வருத்தம் இருந்தாலும், அவரோட இந்த நிலைமைக்கு அவங்க குடும்பத்துல உள்ளவங்கதான் காரணம். சின்னம்மாவுக்கு மக்கள் மத்தியில இருந்த அவப்பெயரை மாத்தினதுல எங்க தலைவரோட பங்கு அதிகம். கட்சி ஆரம்பிச்சு தன்னால என்ன முடியுமோ அதை அவரு செஞ்சிட்டு இருந்தாரு. ஆனா, சின்னம்மா அவங்க குடும்பத்துல உள்ள சிலர் பேச்சைக் கேட்டுகிட்டு எங்க தலைவருக்கு பொருளாதார ரீதியா செஞ்சிட்டு வந்த உதவிகளை நிறுத்திட்டாங்க. அதுமட்டுமில்ல, அரசியல்'ல இருந்து ஒதுங்கிக்குறேன்'னு அவங்க அறிவிச்சது மிகப்பெரிய பிழை. அது எங்க கட்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கிடுச்சு. கட்சியில இருந்து பலர் வெளியேறவும் அவங்களோட அந்த நடவடிக்கைதான் காரணம்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

சின்னம்மா வேகமெடுத்தா, எங்க தலைவரும் வேகமா ஏதாவது செய்யுறாரு. கொஞ்ச நாள்'ல ரெண்டு பேரும் சைலன்ட் ஆகிட்றாங்க. அதிமுக-கூட ஃபைட் பண்ணாம அவங்களுக்குள்ளேயே மறைமுகமா அட்டாக் பண்ணிட்டு இருக்காங்க. இரண்டு பேரும் ஒண்ணு சேராம, இனி எந்த மாற்றமும் உண்டாகப் போறது இல்ல. சின்னம்மாவும் களத்துல இறங்கி மக்கள்கிட்ட போகாம, நீதிமன்றத்தை நம்பியே காலம் கழிச்சுட்டு இருக்காங்க. எங்க கட்சியில இருக்க நிர்வாகிகள் எல்லோரும் அ.தி.மு.க, தி.மு.க-வுல இருந்து வந்தவங்க. டெய்லி செலவு செய்யாம தேர்தல் வேலைக்குக் கூட யாரும் வரமாட்டாங்க. நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடியே ஏதாவது மாற்றம் உண்டாகனும். தை பிறந்தா வழி பிறக்கும்'னு சொல்லுவாங்க, இந்தப் பொங்கலுக்குப் பிறகாவது எங்களுக்கு வழி பிறக்குதான்னு பார்க்கணும்'' என்கிறார்கள் ஆதங்கமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism