Published:Updated:

ப.சிதம்பரம் கைது: தமிழகத்தில் அதிர்வு ஏதுமில்லாதது ஏன்?

விகடன் டீம்

காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஈ.வி.கே.எஸ்., சுதர்சன நாச்சியப்பன், கே.வி.தங்கபாலு ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று சிதம்பரம் கோஷ்டி சீறிக்கொண்டிருக்கிறது.

Protesting Congress members
Protesting Congress members

"சிதம்பரத்தை இவ்வளவு அவசரமாக இரவோடு இரவாகக் கைதுசெய்ய வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை என்பது, பெரும்பாலானோரின் கருத்து. அப்படி நடந்ததற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். அவரின் கைது நடவடிக்கைக்குப் பின்னால் மிகப்பெரிய பிசினஸ் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதை மோப்பம் பிடித்த சுப்பிரமணியன் சுவாமி, கைது நடவடிக்கையிலிருந்து சி.பி.ஐ பின்வாங்கிவிடுமோ எனப் பதறிப்போய், ஆர்.எஸ்.எஸ் மூலமாக நெருக்கடி கொடுத்திருக்கிறார். அங்கிருந்து வந்த பிரஷரில்தான் சுவர் ஏறிக் குதித்துக் கைதுசெய்யும் அளவுக்கு சி.பி.ஐ சென்றுள்ளது என்கிறார்கள்." https://bit.ly/344WnPI

dmk protest in delhi
dmk protest in delhi

சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்கு தமிழகத்தில் அதிர்வு ஏதுமில்லைதான். அதிலொன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால், சிதம்பரம் கைதுசெய்யப்பட்ட மறுநாள், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. தந்தை கைதாகி இருந்த நிலையிலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டதில் தி.மு.க-வினருக்குத்தான் ஆச்சர்யம்.

கருணாநிதி இருந்தபோதே, சிதம்பரத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஒத்துப்போகாத நிலையிருந்தது. ஸ்டாலின் தலைவரான பிறகும் அதே நிலைதான் தொடர்ந்தது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி கலந்துகொண்டது ஸ்டாலினையே ஆச்சர்யப்படவைத்தது என்கின்றனர்.

டெல்லியில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய அதே நாளில்தான் சிதம்பரம் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஈ.வி.கே.எஸ்., சுதர்சன நாச்சியப்பன், கே.வி.தங்கபாலு ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று சிதம்பரம் கோஷ்டி சீறிக்கொண்டிருக்கிறது.

சிதம்பரம் கைதை ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடிய தகவலெல்லாம், சிதம்பரம் தரப்புக்குச் சென்றுள்ளது. இதனால் சிதம்பரம் குடும்பத்தினர் ரொம்பவே நொந்துபோயிருக்கின்றனர். அமித் ஷாவின் பழைய பகைதான் இதற்குக் காரணம் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாருமே வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதிலும் அவர்களுக்கு வருத்தமாம்."

Karti Chidambaram
Karti Chidambaram

ஸ்டாலின் பேட்டியிலேயே பெரிதாகக் காரமில்லை. பெயரளவுக்கே எதிர்ப்பைப் பதிவுசெய்தார் ஸ்டாலின். தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் கோபத்தைவிட அச்சமே பெரிதாக இருக்கிறது. காஷ்மீருக்காக டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காததற்கும் அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

- தி.மு.க, ஆர்ப்பாட்டம், அமித் ஷா ரியாக்‌ஷன், எடப்பாடி டூர் உள்ளிட்ட உள்ளரசியல் விவகாரங்களை ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: சர்வதேச கவனம் பெற்ற தி.மு.க... கடுகடுப்பில் அமித் ஷா! - அடுத்த குறி யாருக்கு?

https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-politics-and-current-affairs-dmk-received-international-attention

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/