Published:Updated:

பில்கிஸ் பானோ வழக்கும், குஜராத் தேர்தலும்... தாக்கத்தை ஏற்படுத்துமா?!

பில்கிஸ் பானோ

பிரதமர் மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலமாகவும், பாஜக-வின் கோட்டைகளில் ஒன்றாகவும் இருப்பதால் குஜராத்தில் இந்த முறையும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க இருக்கிறது.

பில்கிஸ் பானோ வழக்கும், குஜராத் தேர்தலும்... தாக்கத்தை ஏற்படுத்துமா?!

பிரதமர் மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலமாகவும், பாஜக-வின் கோட்டைகளில் ஒன்றாகவும் இருப்பதால் குஜராத்தில் இந்த முறையும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க இருக்கிறது.

Published:Updated:
பில்கிஸ் பானோ

பிப்ரவரி 27, 2002-ல் கோத்ராவிலிருந்து அயோத்திக்குத் திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அப்போது குஜராத்தில் வெடித்த கலவரத்திலிருந்து தப்பிக்க ஓடிய பில்கிஸ் பானோ என்ற ஐந்து மாத கர்ப்பிணியை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரின் 3 வயது பெண் குழந்தையுடன் சேர்த்து அவரின் குடும்ப நபர்கள் ஏழு பேரைக் கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட நாள்கள் நடைபெற்ற இந்த வழக்கில், கடந்த 2008-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்த இவர்களுக்கு, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து, 11 பேரும் கடந்த 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

குஜராத் கலவரம்
குஜராத் கலவரம்

11 பேர் விடுதலைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில், குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிரதமர் மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலமாகவும், பாஜக-வின் கோட்டைகளில் ஒன்றாகவும் இருப்பதால் அங்கு இந்த முறையும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை குஜராத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். "பாஜக-வை ஆதரிக்கவில்லையென்றால் இஸ்லாமியர்களும், பட்டியலினத்தவர்களும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற பரப்புரையே கடந்த தேர்தலில் எடுபட்டது. அதே பரப்புரைதான் இந்த முறை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன். சாதி உச்சகட்டத்தில் இருக்கும் மாநிலம் குஜராத். எனவே, எதிர்கட்சிகள்தான் புதுவிதமான மாற்று யோசனையைக் கையாள வேண்டும்" என்றார்.

கோபண்ணா
கோபண்ணா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, ``75வது சுதந்திர தினத்தைக் கணக்கில்கொண்டு அவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு என்பது அப்பட்டமான சட்டவிரோதச் செயல். நிர்பயா வழக்குக்குப் பின்னர் வன்கொடுமை வழக்குகளில் தீவிரத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டின. ஆனால், குற்றம் செய்த 11 பேரை விடுதலை செய்வதும், அவர்களின் காலில் விழுந்து வாழ்த்துகளைப் பெறுவதையெல்லாம் இந்தியக் குடிமக்கள் யாரும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். இதன் மூலம், அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க-வின் வகுப்புவாத அரசியல் நிச்சயம் முறியடிக்கப்படும்" என்றார். இது குறித்து விளக்கம் கேட்க, தமிழக பாஜக-வினரிடம் தொடர்ந்து முயன்றும் அவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டனர்.