Election bannerElection banner
Published:Updated:

`ரூ.100 கோடி லஞ்சப்புகார்’ - முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைதாவாரா? -நெருக்கடியில் சிவசேனா அரசு

Anil deshmukh
Anil deshmukh

ரூ.100 கோடி லஞ்சப்புகாரில் சிக்கிய மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் சி.பி.ஐ. இன்று(14ம் தேதி) விசாரணை நடத்துகிறது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழும்பி இருக்கிறது.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மீது மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மிகப்பெரிய லஞ்ச ஊழல் புகாரை சுமத்தியுள்ளார். தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்ல பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மும்பை குற்றப்பிரிவு அதிகாரி சச்சின் வாசிடம் அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள பீர்பார்கள், ரெஸ்டாரன்ட்களில் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடி வசூலித்துக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை சச்சின் வாஸ் என்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்த போது தெரிவித்ததாக முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு பரம்பீர் சிங் கடிதம் எழுதினார். அதோடு உள்துறை அமைச்சகத்தில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

anil deshmukh
anil deshmukh

இப்புகார்கள் குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி பரம்பீர் சிங் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இக்குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ.விசாரிக்க உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் சி.பி.ஐ. இக்குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறது. இதில் ஏற்கனவே சச்சின் வாஸ், பரம்பீர் சிங் ஆகியோரிடம் சி.பி.ஐ.வாக்குமுலம் வாங்கியுள்ளது. இதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அனில் தேஷ்முக்கிற்கு சி.பி.ஐ.சம்மன் அனுப்பி இருந்தது.

மகாராஷ்டிரா: ரூ.100 கோடி லஞ்சப் புகார் - அரசுக்கு நெருக்கடி; அமைச்சர் அனில் தேஷ்முக் தலை தப்புமா?

அதன் அடிப்படையில் அனில் தேஷ்முக் 14ம் தேதி சி.பி.ஐ.அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் கொடுக்க இருக்கிறார். அனில் தேஷ்முக் மீதான புகார் உண்மைதான் என்று கூறி சச்சின் வாஸ் சிறப்பு நீதிமன்றத்தில் கடிதம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. தற்போது விசாரணைக்கு ஆஜராகும் அனில் தேஷ்முக் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

பரம்பீர் சிங்குடன் அனில் தேஷ்முக்
பரம்பீர் சிங்குடன் அனில் தேஷ்முக்

அனில் தேஷ்முக் கைது செய்யப்படும் பட்சத்தில் அது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படும். ஏற்கனவே பா.ஜ.க தலைவர்கள், மகாராஷ்டிரா அமைச்சர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்வார்கள் என்றும் அதன் மூலம் ஆட்சி கவிழும் என்று கூறி வருகின்றனர். சில ஐ.பி.எஸ்.அதிகாரிகளை பா.ஜ.க தங்களது கையிக்குள் வைத்துக்கொண்டு சிவசேனா தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே அனில் தேஷ்முக் மீது லஞ்ச புகாரை தெரிவித்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது இலாகா பூர்வ விசாரணையை தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு