Election bannerElection banner
Published:Updated:

அரசியலிலிருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா?

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க-வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், `அ.ம.மு.க தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள்’ என்றுதான் பொருள்கொள்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலின்போது எதிர்பார்க்காத பல தரமான சம்பவங்கள் நடந்தேறிவருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்காமலேயே, விலகிச் சென்றார். இந்த ஆண்டு மார்ச்சில் சசிகலா, அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது ஒருபக்கம் அ.தி.மு.க-வுக்கும், அ.ம.மு.க-வுக்கும் இடி என்றாலும், தி.மு.க-வுக்கு இது இடிச் செய்தியா அல்லது கொண்டாடித்தீர்க்கும் வெடிச் செய்தியா?

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

இது குறித்து தி.மு.க-வினரிடம் பேசுகையில், ``தனியாகவோ, சேர்ந்தோ, எங்களை எதிர்த்துப் போட்டியிட்டாலும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 30 சதவிகித வாக்குகளையும், தி.மு.க கூட்டணி 52 சதவிகித வாக்குகளையும் பெற்றது. அ.ம.மு.க தனித்துப் போட்டியிட்டு 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒருவேளை 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் ஒன்றாக இணைந்தாலும்கூட 35 சதவிகிதமாகச் சற்று உயரும். ஆனால், தி.மு.க-வின் 52 சதவிகித வாக்குகளிலிருந்து இறக்கம் கண்டிப்பாக இருக்காது.

சசிகலா-ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி
சசிகலா-ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்றாக இருந்த சமயத்தில் முக்குலத்தோர் லாபியில் இயங்கிவந்த அ.தி.மு.க., எடப்பாடியார் முதல்வரானதும் கவுண்டர் டாமினேஷனுக்குப் போய்விட்டது. ஏற்கெனவே, தலையில் கைவைத்து ஆசீர்வதித்த மோடி, சசிகலாவைச் சிறையில் அடைத்து சோதனை கொடுத்தார் என்பதில் முக்குலத்தோர் சமூகம் பா.ஜ.க மீதும், அ.தி.மு.க மீதும் கோபத்தில் இருக்கிறது. தற்போது அதே இருவர் சேர்ந்து விடுதலையான சசிகலாவை ஒதுங்கவைத்துவிட்டதால், இன்னும் அதிக கோபத்தில் இருக்கிறது முக்குலத்தோர் சமூகம். இது தேர்தலில் எதிரொலிக்கும் வகையில் எந்த ஒரு முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க மாட்டார். ஆட்சி இல்லையென்றாலும், கட்சியாவது நம்மிடம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள்!” என்றார்கள்.

தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம், ``சசிகலா விடுதலையாகி வந்ததில் தி.மு.க-தான் குஷியாக இருந்தது. அ.தி.மு.க ஒருபக்கம் கூட்டணி போட்டுப் போட்டியிடும்; அ.ம.மு.க ஒருபக்கம் சிறு கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிடும். இடையில் சசிகலா புகுந்து, தான்தான் உண்மையான அ.தி.மு.க எனப் பிரசாரம் மேற்கொள்வார், இதனால் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், அ.தி.மு.க-வின் வாக்குகள் மிகப்பெரிய அளவுக்குப் பிரியும். இதன் மூலம் எளிதாக ஜெயித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், என்ன விலை கொடுத்தேனும் எங்களை ஆட்சியமைக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க., சசிகலாவுக்கு நெருக்கடி கொடுத்து ஒதுங்கவைத்துவிட்டது.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க-வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், `அ.ம.மு.க தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள்’ என்றுதான் பொருள்கொள்கிறது. தினகரனுக்கு வாக்களிக்கச் சொல்லாமல், அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் சொல்லும்போதே சசி எந்த அளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் என்பது புரிகிறது. இதனால் ஓட்டுப் பிரியாமல் அ.தி.மு.க-வுக்கு விழுந்துவிட்டால், தி.மு.க-வுக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்படத்தான் செய்யும்” என்றார்.

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் என்ன மாற்றம் நிகழும்? #VikatanPoll

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

அரசியலிலிருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா?

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு