Published:Updated:

``மத்திய அரசு அனுப்பிய `பார்சலை’ திரும்பப் பெறவில்லையெனில்..." - யாரைக் குறிப்பிடுகிறார் தாக்கரே?!

உத்தவ் தாக்கரே

ஆளுநர் கொஷாரியா அனைத்து எல்லைகளையும் தாண்டிச் செயல்படுவதாக சரத் பவாரும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

``மத்திய அரசு அனுப்பிய `பார்சலை’ திரும்பப் பெறவில்லையெனில்..." - யாரைக் குறிப்பிடுகிறார் தாக்கரே?!

ஆளுநர் கொஷாரியா அனைத்து எல்லைகளையும் தாண்டிச் செயல்படுவதாக சரத் பவாரும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் சத்திரபதி சிவாஜிக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. முதல்வர் ஏக்‌நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜகவினர்கூட இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்திருக்கும் பேட்டியில், ``மத்திய அரசு அனுப்பிய அமேசான் பார்சல் ஆளுநர் கோஷ்யாரி. அந்த பார்சல் மகாராஷ்டிராவுக்குத் தேவையில்லை. எங்களுக்கு அந்த பார்சல் தேவையில்லை என்பதால் அதை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். இதற்கு முன்பு சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிபா புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோரை அவமதித்தார். அதோடு மும்பை, தானேயில் இருக்கும் மராத்தியர்களையும் அவமதித்துப் பேசினார்.

கொஷாரி
கொஷாரி

இப்போது சத்ரபதி சிவாஜியை ஆளுநர் அவமதித்திருக்கிறார். எனவே அடுத்த சில நாள்களில் ஆளுநரைத் திரும்பப் பெறவில்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். ஆளுநர் கோஷ்யாரி எப்போதும் மகாராஷ்டிரா தலைவர்களை அவமதித்துக்கொண்டிருக்கிறார். மத்திய அரசு நினைப்பதைத்தான் கோஷ்யாரி சொல்கிறாரா... ஆளுநருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆளுநரைத் திரும்ப பெற மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். நான் மூன்று முதல் ஐந்து நாள்கள் காத்திருப்பேன். இந்த நாள்களில் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பேன்.

கோஷ்யாரிக்கு எதிராக மாநிலம் தழுவிய அமைதிப் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்துவருகிறோம். ஆளுநர் பதவி முதியோர் இல்லம் போலாகிவிட்டது. மத்தியில் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தாங்கள் விரும்பும் நபர்களை ஆளுநராக நியமிக்கின்றன. அந்த ஆளுநர்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், பாஜக எம்.பி உதயன்ராஜே போஸ்லே ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். `மொகலாய மன்னர் ஔரங்கசீப்பிடம் சத்ரபதி சிவாஜி மன்னிப்புக் கேட்டார்’ என்று பாஜக பிரமுகர் சுதன்சு திரிவேதி சொன்னதற்கும் போஸ்லே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் கோஷ்யாரி அனைத்து எல்லைகளையும் தாண்டிச் செயல்படுவதாக சரத் பவாரும் குற்றம்சாட்டியிருக்கிறார்.