Published:Updated:

`பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க முடியாது!’ - சிவசேனா மீண்டும் திட்டவட்டம்

சஞ்சய் ராவத்
News
சஞ்சய் ராவத்

`காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க முடியாது’ என்று சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Published:Updated:

`பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க முடியாது!’ - சிவசேனா மீண்டும் திட்டவட்டம்

`காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க முடியாது’ என்று சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சஞ்சய் ராவத்
News
சஞ்சய் ராவத்

காங்கிரஸ் தலைமை பலவீனமாக இருப்பதால் தேசிய அரசியலுக்கு வர, பலரும் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் என்று எண்ணிக்கொண்டே போகலாம். இவர்களில் மம்தா பானர்ஜி மட்டும் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மும்பை வந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து பாஜக-வுக்கு எதிரான மாற்று அணி உருவாக்குவது குறித்து ஆலோசித்துவிட்டுச் சென்றுள்ளார். சந்திரசேகர் ராவுடன் நடிகர் பிரகாஷ் ராஜும் வந்திருந்தார். அவர் சந்திரசேகர் ராவ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரத்பவாருடன் சந்திரசேகர் ராவ் மற்றும் பிரகாஷ் ராஜ்
சரத்பவாருடன் சந்திரசேகர் ராவ் மற்றும் பிரகாஷ் ராஜ்

இந்நிலையில் பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத ஓர் அணியை உருவாக்க முடியாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் இன்று காலையில் அளித்த பேட்டியில், ``பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத ஓர் அணியை உருவாக்குவோம் என்று நாங்கள் சொல்லவே இல்லை. மம்தா பானர்ஜி பாஜக-வுக்கு எதிராக ஓர் அரசியல் அணியை உருவாக்கும் திட்டத்தைச் சொன்னபோது, காங்கிரஸ் கட்சியையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிவசேனாதான் முதன்முதலில் தெரிவித்தது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் சேர்க்கும் திறமை சந்திரசேகர் ராவுக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

சிவசேனா தனது கட்சிப் பத்திரிகையிலும் இது தொடர்பாக எழுதியிருக்கும் தலையங்கத்தில், ``ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டம் பாஜக-வுக்கு எதிராக தேசிய அளவில் புதிய அணியை விரைவாக உருவாக்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே சிவசேனா ஒரு முறை காங்கிரஸ் இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.