Published:Updated:

``ஹிஜாப், ஜீன்ஸ்... எந்த உடை அணியவேண்டும் என முடிவெடுப்பது பெண்களின் உரிமை!" - பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என முடிவெடுப்பது பெண்களின் உரிமை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்சசையை கிளப்பியிருக்கிறது. அமைதி, நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும்விதமான ஆடைகளை மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குள் அணிந்து வரக் கூடாது என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து இந்த விவகாரம் உலக நாடுகள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பெண் உரிமை அமைப்புகள் என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``ஹிஜாப், ஜீன்ஸ், கூன்ஹாட், பிகினி என எதை அணிவது என்பது குறித்து முடிவெடுப்பது பெண்களின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism