Published:Updated:

மழை புத்தகம் மக்கள் கவிதை சமையல்

தமிழச்சி தங்கபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழச்சி தங்கபாண்டியன்

பிடித்தவை 5

மழை புத்தகம் மக்கள் கவிதை சமையல்

பிடித்தவை 5

Published:Updated:
தமிழச்சி தங்கபாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழச்சி தங்கபாண்டியன்
மழை புத்தகம் மக்கள் கவிதை  சமையல்

என் வீட்டுத் தோட்டத்தில்...

தமிழிசை சௌந்தர்ராஜன், தெலங்கானா ஆளுநர்

கோயில்: ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டுத்தான் அன்றாட வேலைகளைத் தொடங்குவேன். நான் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்க உதவுவது இந்தப் பழக்கம்தான். இப்போது ராஜ்பவனுக்குள் இருக்கும் ரேணுகாதேவியை தினமும் வணங்கிவிடுகிறேன்.

அதிகாலை எழுதல்: காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை எனக்கே எனக்கான நேரம். அப்போது யோகா, உடற்பயிற்சி செய்வது, பக்திப் பாடல்கள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் எப்போதும் சுறுசுறுப்போடு இயங்குவதற்கு இந்த அதிகாலை எழும் பழக்கம்தான் காரணம்.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

புத்தகம்: `கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்... என் பிள்ளைகளுக்கு நான் சேர்த்த சொத்து புத்தகங்கள் தாம்' என்று அப்பா அடிக்கடி சொல்வார். அன்றாடத்தின் பரபரப்பு களிலிருந்து எனக்கு விடுதலை தருவது புத்தகங்களே. என் பயணங்களும் புத்தகங்களால்தான் நிறைவு பெறும்.

செடி வளர்த்தல்: மனக்கஷ்டம் என்றால் பூச்செடிகளுக்குப் பக்கத்தில் போய் நின்றுவிடுவேன். சிறிது நேரத்திலேயே என் பாரங்கள் எல்லாம் சூரியனைக்கண்ட பனி போல விலகிவிடும்.

மழை: குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது மழையில் நனைந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். செடி கொடிகளைப் போலவே எனக்கும் என் வாழ்வுக்கும் மழை மிகவும் முக்கியமான ஒன்று.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சின்ன மகளோடு செல்ல நிமிடங்கள்!

தமிழச்சி தங்கபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்

மீனாட்சியம்மன் கோயில் குங்குமம்: அங்கேயே தயாரிக்கப்படுகிற அந்த குங்குமத்தை முன் நெற்றியில் வைத்துக்கொள்ள பிடிக்கும். அது இல்லாமல் நீங்கள் என்னைப் பார்க்க முடியாது!

அப்பா: அப்பாவின் சார்லி சென்ட் வாசம்கொண்ட கர்சீப் எப்போதும் என்னிடம் இருக்கும். எப்போதாவது மனச் சங்கடம் அல்லது தனிமையை உணரும்போது அதை கையில் வைத்துக்கொள்வேன். வெளியில் செல்லும்முன் அப்பா படத்துக்கு முன் நின்று ‘வரேன்' என்று சொல்லிவிட்டு கிளம்புவது, எப்போது ஊருக்குச் சென்றாலும் அப்பா வின் சமாதிக்கு மல்லிகைப்பூ மாலை வைப்பது... இவையெல்லாம் எனக்கு முக்கியம்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

வழக்கங்கள்: காலை நடைப்பயிற்சி, யோகா செய்வது தொடங்கி, இரவு எந்நேரம் வீட்டுக்கு வந்தாலும் சின்ன மகளோடு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது செலவிடுவது வரை என்னுடைய ‘டெய்லி ரொட்டீன்’ மாறுவதே இல்லை.

இசை: இளையராஜாவின் இசை என்பது உயிர்கொடுக்கக்கூடிய டானிக்.

புத்தகங்களும் என் செடிகளும்: ஜென் புத்தகங்கள், கவிதைகள், மேற்கோள்கள் என வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வீட்டுக்குள் நுழைந்ததும் பவளமல்லிச் செடி, பின்புறத்தில் மனோ ரஞ்சிதம் செடி என அவற்றைப் பார்ப்பதும் பராமரிப்பதும் பிடிக்கும்.

தனிமையில் இனிமைப் பயணங்கள்

ஜோதிமணி, நாடாளுமன்ற உறுப்பினர்

அம்மா: நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ அதற்குக் காரணம் என் அம்மாதான். என் சின்ன வயசுலேயே அப்பா இறந்துவிட்டார். அப்போது முதல் அம்மாவாகவும் அப்பாவாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது அம்மாதான். அவர் எனக்கு இளமைப் பருவத்திலேயே நிறைய சுதந்திரம் கொடுத்தார். நேர்மை, எளிமை, மன உறுதியைக் கற்றுக்கொடுத்தார்.

மக்கள்: 21 வயதில் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். அரசியல், தேர்தலைத் தாண்டிய நிபந்தனையற்ற அன்பு மக்களிடமிருந்து கிடைத்து வருகிறது. எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததும் மக்கள்தாம். பெண்ணடிமை என்பது என்னவென்றே அறியாத குடும்பத்தி லிருந்து வந்தேன். ஆனால், உலகில் பெண்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள், சாதி, சமூக வேறுபாடுகள் என்று நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது சாமான்ய மக்கள்தாம்.

ஜோதிமணி
ஜோதிமணி

புத்தகம்: சிறுவயதில் பாட்டி எனக்கு நிறைய கதை சொல்வார். அப்படி ஆரம்பித்ததுதான் புத்தகம் படிக்கும் பழக்கம். அரசியல், அறிவியல், இலக்கியம், வரலாறு என்று எல்லாவிதமான புத்தகங்களையும் படிப்பேன். மகாத்மா காந்தியின் `சத்திய சோதனை’ எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று. அதுபோலவே அம்பேத்கர், பெரியார் என்று என் வாழ்க்கையை மாற்றிய எழுத்துகள் நிறைய உள்ளன.

இயற்கை: இயற்கையும் இயற்கை சார்ந்த இடங்களையும் அதிகம் பிடிக்கும். இதுபோன்ற இடங்களுக்குத் தனியே பயணம் மேற்கொள்ள விருப்பம். தொலைதூர ரயில் பயணமும் பிடித்தமான ஒன்று.

குழந்தைகள்: குழந்தைகளிடம் பேசுவதும், அவர்களிடம் பழகுவதும் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதென்னவோ தெரியவில்லை... என்னையும் குழந்தைகளுக்குப் பிடித்து விடும்!

அது தனி உலகம்!

பாலபாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

முன்தயாரிப்பு: நாளை என்ன வேலை என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்காக என்னை தயார் செய்துகொள்வது எனக்கு மிக முக்கியமான விஷயம்.

தீக்கதிர்: எத்தனை செய்தித்தாள்கள் படித்தாலும், செய்தித் தொலைக்காட்சிகள் பார்த்தாலும், தீக்கதிர் என் மனதுக்கு நெருக்கமாக எப்போதும் என்னுடன் பயணிக்கும் தின இதழ்.

பாலபாரதி
பாலபாரதி

என்.வரதராஜன்: அரசியல் ஆசான்கள் நிறைய பேர் இருந்தாலும், என் வாழ்வில் பெரும்பங்கு வகித்து, என் களப் பயணத்தில் குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்த தோழர் என்.வி எனக்கு என்றும் முக்கியமானவர்.

கம்யூனிச கருத்தியல்: எங்கள் வாழ்வின் அடிப்படை இது. இந்தக் கோட்பாடுகளின் வழியேதான் எங்கள் பயணத்தை அமைத்துக்கொள்கிறோம்.

கவிதைகள்: பொதுவாழ்வைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது... கவிதைகள் வாசிப்பதும் எழுதுவதுமே. அது என்னோடு நானே பேசிக்கொள்ளும் எனக்கான தனி உலகம்!

சமைத்தல் ஒரு பொழுதுபோக்கு!

பி.வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

ஜெயலலிதா: அம்மா அவர்களைப் பார்த்தாலே தைரியமும் தன்னம்பிக்கையும் வரும். ஒருமுறை சட்டமன்றத்தில் நான் நிகழ்த்திய உரைக்காக என்னை அவர்கள் பாராட்டியது என் வாழ்வின் முக்கியமான தருணம்.

எம்.ஜி.ஆர்: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாட்டில், எனக்குப் பேச வாய்ப்பு கிடைத்தது. மாநாட்டு நிறைவுரையை வழங்கியபோது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் பேச்சைப் பாராட்டியதுதான் என் அரசியல் வாழ்க்கையின் தொடக்கம்.

பி.வளர்மதி
பி.வளர்மதி

திருமண வாழ்க்கை: பெண்கள் வீட்டை விட்டுப்போகக் கூடாது என்று சொன்னவர்களுக்கு நடுவே, நான் அரசியலில் ஈடுபடுவதை மனதார ஏற்றுக்கொள்பவர் என் கணவர் பாலசுப்பிரமணியம். எனக்குக் கிடைத்த கணவரைப் போல, வேறு யாருக்கும் கணவர் கிடைத்திருக்க மாட்டார்கள் என்று என்னால் உறுதியுடன் சொல்ல முடியும்.

தெய்வ வழிபாடு: ஒவ்வொரு நாளும் எனக்கு தெய்வ வழிபாட்டில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல யோகாவும் தியானமும் நான் தவறாமல் செய்பவை.

சமையல்: வித்தியாசமான உணவுவகைகளை சமைக்க விரும்புவேன். அவள் விகடனில் வரும் சமையல் குறிப்பு இணைப்பை சேகரித்து வைத்துள்ளேன். சமைப்பது என் பொழுதுபோக்கு என்றே சொல்லலாம்!