Election bannerElection banner
Published:Updated:

மதுரை: ஸ்டாலின் குறித்த பெண்மணியின் வேண்டுகோளும் பொன்.ராதாகிருஷ்ணனின் ரியாக்ஷனும்..!

பொன்.ராதாகிருஷ்ணனுடன் அப்பெண்மணி
பொன்.ராதாகிருஷ்ணனுடன் அப்பெண்மணி

தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர், செய்தியாளர்களிடம் ``தி.மு.க பெரிய அளவில் சரிவை சந்திக்கும்” என்று பேட்டியளித்துவிட்டு கிளம்பினார்.

"மு.க. ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கூறிய பெண்மணியால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சலசலப்பு ஏற்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபடுவதற்கு பொதுமக்கள் அதிகம் பேர் வந்தனர்.

இன்று மதுரை வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட கட்சி நிர்வாகிகளுடன் வந்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவர், செய்தியாளர்களிடம் ``தி.மு.க பெரிய அளவில் சரிவை சந்திக்கும்” என்று பேட்டியளித்துவிட்டு கிளம்பினார்.

இவர் பேட்டியளித்ததை கவனித்த கோயிலுக்கு வந்த பெண்மணியொருவர், பொன்.ராதாகிருஷ்ணனை பார்த்து கும்பிட்டார். பதிலுக்கு வணங்கியவரிடம், ``தமிழகத்தில் அடுத்த முதலமைச்சரா மு.க.ஸ்டாலின்தான் வரவேண்டும். எங்க கஷ்டமெல்லாம் தீர வேண்டும்” என்று சொல்ல அதைக்கேட்டு அதிர்ச்சியான பொன்.ராதாகிருஷ்ணன், 'அதை அம்மனிடம் சொல்லுங்க' என்று மீனாட்சியம்மன் கோயிலை பார்த்து கை காட்டினார்.

பொன்.ராதாகிருஷ்ணனுடன் அப்பெண்மணி
பொன்.ராதாகிருஷ்ணனுடன் அப்பெண்மணி

அப்போதும் விடாத அப்பெண்மணி, "அம்மாகிட்டே சொல்லிட்டேன், ஸ்டாலின்தான் முதலமைச்சரா வருவார்...” என்று மீண்டும் சொல்ல, அவரை பார்த்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

இந்த சம்பவத்தால் அங்கிருந்த மக்களும் அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு