Published:Updated:

கேரளா:`` `ஈசோ’ என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்க மாட்டோம்’’ முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்

ஈசோ சினிமா
ஈசோ சினிமா

`பெயரை மாற்றாமல் இருந்தால் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்’ என கத்தோலிக்க காங்கிரஸ் என்ற அமைப்பு கூறியிருக்கிறது. மேலும் `` `ஈசோ’ என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்க மாட்டோம்’’ என முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

மலையாள சினிமா இயக்குநர் நாதுர்ஷா இயக்கத்தில் `ஈசோ’, `கேசு ஈ வீட்டின்றெ ஐஸ்வர்யம்’ என இரு திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. ஈசோ என்பது ஏசுவின் பெயரைக் குறிப்பதாகவும், `ஏசு இந்த வீட்டின் ஐஸ்வர்யம்’ என்பதை `கேசு இந்த வீட்டின் ஐஸ்வர்யம்’ என மாற்றியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. `ஈசோ' சினிமாவில் கதாநாயகனாக நடிகர் ஜெயசூர்யாவும், `கேசு ஈ வீட்டின்றெ ஐஸ்வர்யம்’ சினிமாவின் கதாநாயகனாக நடிகர் திலீப்பும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சினிமா குறித்த டைட்டில் போஸ்டர் வெளியானவுடன் சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது. இந்த சினிமா டைட்டில்களுக்கு சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. `ஈசோ’ சினிமா கிறிஸ்தவ மத நம்பிக்கையைச் சிதைக்கும்விதமாக இருக்கிறது என்று சில அமைப்புகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இந்தப் பெயரை மாற்றாமல் இருந்தால் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என கத்தோலிக்க காங்கிரஸ் என்ற அமைப்பு கூறியிருக்கிறது. மேலும் `` `ஈசோ’ என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்க மாட்டோம்’’ என முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

கேரளா: பி.எஸ்.பி வேட்பாளரைக் கடத்தியதாக  பா.ஜ.க தலைவர்மீது வழக்கு; போராட்டம் அறிவித்த பா.ஜ.க தலைமை!
ஈசோ சினிமா
ஈசோ சினிமா

இந்தநிலையில், ``அந்த சினிமாவில் மதம் சம்பந்தமாக எந்தக் காட்சிகளும் இல்லை. படத்தைப் பார்த்துவிட்டு கருத்து கூறட்டும். சினிமாக்களின் பெயர்களை மாற்றப்போவதில்லை. அப்படி மாற்றினால் அது மலையாள சினிமாவில் மோசமான வழக்கமாகிவிடும்’’ என இயக்குநர் நாதுர்ஷா தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், `வட இந்தியாவில் இருப்பது போன்று சினிமாவில் மதத்தைப் புகுத்தும் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இயக்கநர் நாதுர்ஷாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகிவருகிறது. அதோடு, வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பிஷப்புகள் இயக்குநர் நாதுர்ஷாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றனர். இயக்குநர் நாதுர்ஷா முஸ்லிம் என்பதால் இந்தச் சர்ச்சையைக் கிளப்புவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாதுர்ஷாவுக்கு ஆதரவாக மலையாள சினிமா தொழில்நுட்ப கூட்டமைப்பான மாக்டா (MACTA) அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

சினிமா இயக்குநர் நாதுர்ஷா
சினிமா இயக்குநர் நாதுர்ஷா

இது குறித்து மாக்டா அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `நாதுர்ஷா இயக்கும் சினிமா பெயரைவைத்து தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்புவது கேரளத்துக்கு அழகல்ல. நாதுர்ஷாவுக்கு மாக்டா பின் துணையாக நிற்கும். சினிமா என்பது இந்த நூற்றண்டின் மதச்சார்பற்ற கலை வடிவம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு