Election bannerElection banner
Published:Updated:

திருச்சி: `அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவா?’ - பதிலளிக்க மறுத்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

`அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா எனக் கூறுவது அவர்களுடைய கருத்து. அதற்கு நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

``அ.தி.மு.க சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. எங்களுக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் - அம்மாவின் ஆசியோடு அடுத்தமுறையும் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம்” என்று ஆவேசமாகப் பேசினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி கிழக்கு வட்டாட்சியர் புதிய அலுவலகத்துக்கான பூமி பூஜை, கொட்டப்பட்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வெல்லமண்டி நடராஜன், ``திருச்சியில் மீண்டும் போட்டியிட நல்ல நாள் பார்த்து விருப்ப மனு அளிக்கவிருக்கிறேன்.

நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் எனத் தலைமை கூறுகிறதோ அங்கு போட்டியிடுவேன். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. அரசு விளம்பரங்களையே முதலமைச்சர் வழங்குகிறார். வேண்டுமென்றே சிலர் ஆதாயம் தேட அ.தி.மு.க-வில் கருத்து வேறுபாடு இருக்கிறது என செய்தி பரப்புகிறார்கள். அ.தி.மு.க சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.

வட்டாட்சியர் புதிய அலுவலகத்துக்கான பூமி பூஜை
வட்டாட்சியர் புதிய அலுவலகத்துக்கான பூமி பூஜை

இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. எங்களுக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், அம்மாவின் ஆசியோடு அடுத்தமுறையும் நாங்கள்தான் ஆட்சியமைக்கப்போகிறோம்.

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

மக்களுக்கு நலத் திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கின்றனவா என்பதை வரும் தேர்தல் பறைச்சாற்றும். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க 234 தொகுதிகளில் 184 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது வரலாறு. அதே சாதனையை மீண்டும் படைப்போம். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா எனக் கூறுவது அவர்களுடைய கருத்து. அதற்கு நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க-வுக்கு மக்கள் பலம்தான் இருக்கிறது” என்றார்.

பூமி பூஜை
பூமி பூஜை

`ஓ.பி.எஸ் பரதனாக இல்லாமல், ராவணனுடன் சேர்ந்துவிட்டார் என டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்திருக்கிறாரே...’ என்று அமைச்சர் வெல்லமண்டியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு, `மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க மீது எந்தவித விமர்சனம் வைத்தாலும் அதற்கு பதிலளிக்க தலைமையிலிருந்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்கு சிறப்பான பதிலளிப்பார்கள். இதற்கு நான் பதிலளிக்கக் கூடாது’ என முடித்துக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு