Published:Updated:

`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்!' - டெல்லியில் கலங்கிய தமிழிசை

அ.சையது அபுதாஹிர்
`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்!' - டெல்லியில் கலங்கிய தமிழிசை
`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்!' - டெல்லியில் கலங்கிய தமிழிசை

``நம்பியவர்களே எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்'' என்று தமிழிசை விட்ட கண்ணீரால் டெல்லி பி.ஜே.பி-கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்!' - டெல்லியில் கலங்கிய தமிழிசை

டெல்லியில் பி.ஜே.பி மாநிலத் தலைவர்கள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்ற மாநிலங்களின் மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் பி.ஜே.பி படுதோல்வியைச் சந்தித்த தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளிடம் தோல்வி குறித்த காரணமும் அலசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசியபோது, ``மோடிக்கு எதிராக அலை தமிழகத்தில் வீசியதே தோல்விக்குக் காரணம்” என்று தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் சொல்லியுள்ளார்கள். நேற்று கூட்டம் நடைபெற்று முடிந்தபோது, தேசியத் தலைவர் அமித் ஷாவை தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சந்தித்துள்ளார்.

`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்!' - டெல்லியில் கலங்கிய தமிழிசை

அப்போது, ``தமிழகத்தில் அ.தி.மு.க-வை நம்பியே நாம் 5 தொகுதிகளில் போட்டியிட்டோம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பைத் தரவில்லை. பி.ஜே.பி வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததற்கு, அதுவே பெரிய காரணம். அடுத்த முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாகப் பணியாற்றுவோம்” என்று கண்ணீர் வடித்துள்ளார். அமித் ஷாவோ இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ``அடுத்தவர்களை நம்பியதைவிட நம் கட்சியை வலுப்படுத்தியிருக்க வேண்டும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று மட்டும் சொல்லி அனுப்பிவிட்டார்.

தமிழகத்தில் பி.ஜே.பி அடைந்த தோல்விக்குப் பிறகு, கட்சி நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஏற்கெனவே பதவி நீட்டிப்பில் இருந்து வரும் தமிழிசை தனது பதவிக்கு உடனடியாக ஆபத்து வந்துவிடும் என்பதாலே, அமித் ஷாவை சந்தித்து முறையிட்டு இருக்கலாம் என்கிறார். அதேநேரம் தேசிய அளவில் உட்கட்சி தேர்தலை நடத்த பி.ஜே.பி தலைமை முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்தல் முடிந்து, வரும் ஜனவரி மாதமே தமிழகத்துக்குப் புதிய தலைமை வரும் என்கிறார்கள் டெல்லி பி.ஜே.பி தரப்பினர். 

Vikatan