Published:Updated:

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

ஆ.விஜயானந்த்

`22 தொகுதிகளில் தேர்தல் நடக்கப் போகிறது, அனைத்திலும் வெற்றி பெற்று ஆட்சியடைக்க வேண்டும்' எனப் பொறுப்புக்கான அதிகாரத்தை என்.ஆர்.இளங்கோவிடம் ஒப்படைத்தனர். 9 தொகுதிகளில் தோல்வி ஏற்பட்ட பிறகு, இந்த 32 பேர் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்
`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

ட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணங்களைக் கண்டறிய மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் ஸ்டாலின். `தேர்தலில் தோற்கக் கூடாது என்பதற்காகத்தான் அறிவாலயத்தில் வார் ரூம் ஒன்று செயல்பட்டது. அந்த வார் ரூம் சிறப்பாகச் செயல்பட்டதா என அறியாமல் கீழ்மட்ட நிர்வாகிகளைப் பலிவாங்குவதற்காக இப்படியொரு குழு அமைக்கப்பட்டுள்ளது' எனக் கொந்தளிக்கின்றனர் உடன்பிறப்புகள். 

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

நாடாளுமன்றத் தேர்தலோடு 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் தோற்றது தி.மு.க. `ஜூன் 3 அன்று முதல்வராகப் பதவியேற்பார் ஸ்டாலின்' என உதயநிதி உள்ளிட்டவர்கள் தேர்தல் பிரசாரத்தில் பிரதானக் கருத்தாக முன்வைத்தனர். ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டதால், அ.தி.மு.க முகாமில் கூடுதல் உற்சாகம் தென்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கூடுதலாக வாரியிறைத்தது அ.தி.மு.க. இதை உணர்ந்த தி.மு.க-வினரும், `பப்ளிக் பணத்தைத்தான் எதிர்பார்க்கின்றனர். நாம் 500 ரூபாய் கொடுக்கக் கூடிய இடத்தில் 1000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தால் உறுதியாக வெற்றி பெறலாம்' என மாவட்டச் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்குத் தி.மு.க தலைமையிடம் இருந்தும் பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லை. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும், ` சில கோடி ரூபாய்களில் ஆட்சி அதிகாரம் கைநழுவிப் போய்விட்டது' என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினர். 

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

இந்த நிலையில், `தலைமைக் கழக அறிவிப்பு' என்ற பெயரில் நேற்று முரசொலியில் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், ` தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்த 9 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்திட, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் தொகுதிவாரியாக ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறது. அதன்படி, சாத்தூர், நிலக்கோட்டை (தனி) ஆகிய தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ இ.கருணாநிதி, வழக்கறிஞர் அருண் ஆகியோரும் அரூர்(தனி), பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர் ஆகிய தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ,. டி.ஆர்.பி.ராஜா, வழக்கறிஞர் நீலகண்டன் ஆகியோரும் மானாமதுரை (தனி), விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளுக்கு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, வழக்கறிஞர் பரந்தாமன் ஆகியோரும் பரமக்குடி (தனி), சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு சி.வி.எம்.பி.எழிலரசன், வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

``ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் தோற்றது தோற்றதாகவே இருக்கட்டும். வெற்றிக்குக் காரணம், `மோடி அலையா... தி.மு.க மீதான பாசமா?' என்ற விவாதத்துக்குள்ளும் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வின் மூலம் யாரையெல்லாம் பலிகடா ஆக்கப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர், `` சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், அறிவாலயத்தில் உடன்பிறப்புகளோடு தனியாக ஓர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார் ஸ்டாலின். அந்த நேரத்தில், துரைமுருகனைக்கூட தன் பக்கத்தில் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளையும் கீழ்மட்ட ஆட்களையும் அழைத்து மனம் திறந்து பேசினார். ` என்னிடம் நேரிடையாகச் சொல்வதற்குத் தயங்கினால், இதோ இங்கிருக்கும் புகார் பெட்டியில் உங்கள் கோரிக்கையை எழுதிப் போடுங்கள்' என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார் ஸ்டாலின். இதனால், கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் பெருக்கெடுத்தது. இந்த ஆய்வின்போது, பெரும்பாலும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அறிவாலய நிர்வாகிகள் மீதுதான் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட புகார்களின் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

இதன்பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இங்கு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், டெபாசிட்டையும் பறிகொடுத்தது தி.மு.க. `இங்கு ஏன் தோற்றோம்?' என ஆய்வும் நடத்தப்பட்டது. `வேட்பாளர் ஏன் தோற்றார்?' என்பதற்காகத்தான் ஆய்வு நடந்தது. அந்த வேட்பாளரையே பகுதிச் செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கிவிட்டனர். `மற்றவர்கள் வேலை செய்யவில்லை' எனக் காரணத்தைச் சொல்லி நீக்குவதுதான் சரியான நடவடிக்கை. வேட்பாளரையே பதவியில் இருந்து நீக்கிய ஆச்ச்ர்யம், ஆர்.கே.நகரில் அரங்கேறியது. இங்கு தேர்தல் பணி பொறுப்பாளர்களாக எ.வ.வேலு, சேகர் பாபு, மாவட்டச் செயலாளர் சுதர்னம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு பேர் அங்கு பணியில் இருந்தும், `யாரும் சரியாக வேலை செய்யவில்லை' எனக் காரணம் சொன்னார்கள். வேலை சரிவர நடக்காமல் இருந்தால், அதை சரியாகச் செய்ய வைக்க வேண்டிய பணி, பொறுப்பாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. ரயில்வே துறையில் விபத்து நடந்தால், துறை அமைச்சரே ராஜினாமா செய்கிறார். ஆனால், தி.மு.க-வில் மட்டும்தான் கடைநிலை ஊழியர்களைப் பழிவாங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர்கள்,  

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

``அறிவாலயம் நியமிக்கக் கூடிய ஆய்வுக் குழுக்களின் மூலம், மாவட்டச் செயலாளர்கள் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள். காரணம், இவர்களில் பெரும்பாலானோர் வசதி படைத்தவர்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாய்வதில்லை. 2016 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு ராமநாதபுரம் உட்பட சில மாவட்டங்களில் மட்டும் மாவட்ட நிர்வாகிகளை மாற்றினார்கள். வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம் ஆகியவற்றில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ` நாங்கள் மட்டும்தான் தவறு செய்தோமோ?' என அறிவாலயத்துக்கே படையெடுத்து வந்து பாதிக்கப்பட்டவர்கள், ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தனர். 22 சட்டமன்றத் தொகுதிகள் பிளஸ் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, என்.ஆர்.இளங்கோ தலைமையில் அறிவாலயத்தில் வார் ரூம் ஒன்றை அமைத்தனர். இந்த வார் ரூமில் 32 பேர் வேலை பார்த்தனர். 

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. `22 தொகுதிகளில் தேர்தல் நடக்கப் போகிறது, அனைத்திலும் வெற்றி பெற்று ஆட்சியடைக்க வேண்டும்' எனப் பொறுப்புக்கான அதிகாரத்தை என்.ஆர்.இளங்கோவிடம் ஒப்படைத்தனர். ஒன்பது தொகுதிகளில் தோல்வி ஏற்பட்ட பிறகு, இந்த 32 பேர் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். களத்தில் தலைமை தாங்கிப் போகிறவர்கள்தான் முக்கியம். பயிற்சியாளர்கள் சரியாக இருந்திருந்தால் எப்படித் தோல்வி வந்திருக்கும். உண்மையில், அந்தந்த தொகுதிக்கு என நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்த பிறகுதான் கீழ்மட்ட நிர்வாகிகளுக்குத் தண்டனை அளிக்க வேண்டும். பெயரளவுக்குக் கீழ்மட்ட நிர்வாகிகளைப் பழிவாங்கினால், பா.ஜ.க போல பூத் ஏஜெண்டுக்கு ஆள் தேட வேண்டியதுதான். இனிவரும் காலங்களில் கொடி பிடிப்பதற்குக்கூட எந்தத் தொண்டனும் வர மாட்டான்" எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தனர். 

`சர்வாதிகார நடவடிக்கை என்ற பெயர் வந்துவிடக் கூடாது!' - ஸ்டாலினின், 8 பேர் கமிட்டியால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

``22 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு வெளியான சில நாள்களிலேயே தோல்விக்கான அனைத்து காரணங்களையும் அறிக்கையாக வாங்கிவிட்டார் ஸ்டாலின். அதன்பேரில் நடவடிக்கை எடுத்தால், `சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார்' என விவாதம் கிளம்பும் என்பதால், 8 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறார். இவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இந்த அறிக்கைகளில் முரண்பாடு ஏற்பட்டால், ஆய்வு முடிவுகள் கிடப்பில் போடப்படுவதற்கே வாய்ப்பு அதிகம்" என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

அறிவாயத்தில் ஸ்டாலின் தனியாக நடத்திய ஆய்வுக் கூட்டம், ஆர்.கே.நகர் ஆய்வுக் கூட்டம், பூத் கமிட்டிகளுக்கான ஆய்வுக் கூட்டம், 9 தொகுதிகளின் தோல்விக்கான ஆய்வுக் கூட்டம் எனக் கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டார் ஸ்டாலின். ` ஆய்வுகளின் முடிவுகள் எப்படியிருந்தன என்பதற்குத் தனியாக ஓர் ஆய்வுக் கூட்டம் போட்டால் நன்றாக இருக்கும்' என்ற ஆதங்கக் குரல்களும் அறிவாலயத்தில் இருந்தே வருகின்றன.