Published:Updated:

` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்!'  - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி

ஆ.விஜயானந்த்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. கன்னியாகுமரி எம்.பி தேர்தலில் பெற்ற வாக்குகளில் 35,000 வாக்குகளை அதிகப்படியாக நாங்குநேரியில் வாங்கியிருக்கிறோம். எனவே, காங்கிரஸ் போட்டியிடுவதுதான் சரியானது.

` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்!'  - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி
` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்!'  - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி

`நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளும் காலி' என அறிவித்துவிட்டார் தமிழக சட்டமன்றச் செயலாளர். இவ்விரு தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், `நாங்குநேரி யாருக்கு என்ற மோதல் தி.மு.க, காங்கிரஸ் முகாம்களுக்குள் வலுக்கத் தொடங்கிவிட்டன. இந்த மோதலைப் பயன்படுத்தி வெற்றி பெறத் திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

திருச்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அன்பில் தர்மலிங்கம் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மகேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, ` நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க போட்டியிட வேண்டும். வரும் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்காமல் தி.மு.க-வே போட்டியிட வேண்டும்' என்பதை வலியுறுத்தினார். அவரது இந்தப் பேச்சு காங்கிரஸ் முகாமுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ` நாங்குநேரி தொகுதி என்பது காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. இங்கு யார் வேட்பாளர் என்பதை வசந்தகுமார்தான் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதியை விட்டுக் கொடுப்பது கனவிலும் நடக்காத காரியம்' எனக் காங்கிரஸ் தரப்பில் கொந்தளிப்பு நிலவுகிறது. 

` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்!'  - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி

`` நாடாளுமன்றத் தேர்தலோடு 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தபோது நாங்கள் எந்த சீட்டையும் கேட்கவில்லை. அந்த 22 தொகுதிகளில் சோளிங்கர், ஒசூர் ஆகியவை நாங்கள் தோற்ற தொகுதிகள். இடைத்தேர்தலில் பெரும் பணம் விளையாடும் என்பதால் காங்கிரஸ் தரப்பிலிருந்து சீட்டைக் கேட்கவில்லை. அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் தி.மு.க-வுக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. கன்னியாகுமரி எம்.பி தேர்தலில் பெற்ற வாக்குகளில் 35,000 வாக்குகளை அதிகப்படியாக நாங்குநேரியில் வாங்கியிருக்கிறோம். எனவே, காங்கிரஸ் போட்டியிடுவதுதான் சரியானது" என விவரித்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர், 

` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்!'  - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி

``தி.மு.க நின்றால், காங்கிரஸ் வாக்குகள் அனைத்தும் அவர்கள் பக்கம் போகும் என்பது நிச்சயமில்லை. தி.மு.க போட்டியிட விருப்பம் தெரிவிப்பது நியாயமல்ல என்றுதான் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நினைக்கின்றனர். தவிர, தி.மு.க இந்தத் தொகுதியைக் கேட்கும் எனவும் தோன்றவில்லை. இது ஒரு பெரிய பிரச்னையாக வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தலைமையில் உள்ளவர்கள் கருதுகிறார்கள். எங்களுக்கு நாங்குநேரியைக் கொடுத்துவிட்டு அவர்கள் விக்ரவாண்டியில் போட்டியிடுவார்கள். கட்சியில் உள்ள சிலர், திருச்சியில் உதயநிதி பேசியதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். அவர் தன்னுடைய விருப்பத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவுதான். காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. அதனால்தான் ஒன்பது மக்களவைத் தொகுதிகளில் 8-ல் வெற்றி பெற்றோம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்வோம்" என்கின்றனர் நிதானமாக. 

` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்!'  - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி

நாங்குநேரி தொகுதியை முன்வைத்து தி.மு.க, காங்கிரஸ் கட்சிக்குள் நடந்துவரும் மோதலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது அ.தி.மு.க. இதைப் பற்றி நம்மிடம் பேசிய ஆளும்கட்சி நிர்வாகிகள், `` வேலூர் எம்.பி தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதால், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளோடு சேர்த்துத் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மத்தியில் பா.ஜ.க ஆட்சி தொடர்வதால், வேலூரில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நாங்குநேரியில் தி.மு.க போட்டியிட்டால், காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இதைக் கணக்குப் போட்டு மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க அணியே வெல்லும் என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. ` சட்டமன்றத்தில் தற்போது இருக்கும் பலத்தோடு மேலும் 2 எம்.எல்.ஏ-க்கள் கூடுதலாக இருப்பது மிகவும் நல்லது. தி.மு.க வெற்றி பெற்ற விக்கிரவாண்டியையும் காங்கிரஸ் வெற்றி பெற்ற நாங்குநேரியையும் அ.தி.மு.க பக்கம் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்தால் மக்கள் மத்தியிலும் நம்மீதான மதிப்பு கூடும். எனவே, இவ்விரு தொகுதிகளிலும் சமூகரீதியாக யாரை முன்னிறுத்தினால் வெற்றி பெற முடியும்?' என ஆய்வு செய்யுமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்!'  - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி

`நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்றால் ஆட்சி நீடிக்கும் என்பதையும் தாண்டி, தன்னுடைய தலைமைக்குக் கட்சிக்காரர்கள் மத்தியில் மதிப்பு கூடும்' எனவும் இரட்டைக் கணக்குப் போடுகிறார் எடப்பாடி. `வசந்தகுமார் வென்ற தொகுதியில் போட்டியிடப் போவது தி.மு.க-வா...காங்கிரஸா?' என்ற மோதலை தங்களுக்குச் சாதகமாகக் கூர்தீட்டிக் கொள்ளும் வகையில் வேகத்தைக் கூட்டத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க. எடப்பாடியின் கணக்குகளைப் பொய்த்துப் போக வைக்கும் வகையில் இடைத்தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறது தி.மு.க.