Published:Updated:

`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்!' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா?

இ.லோகேஷ்வரி
`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்!' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா?
`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்!' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா?

ந்திராவில் பி.ஜே.பி கையாண்ட அதே உத்தியைத் தமிழகத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார், அக்கட்சியின் தேசியத் தலைவர்  அமித் ஷா. இதற்கான துருப்புச்சீட்டாக அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி., சசிகலா புஷ்பா இருக்கப்போகிறார் என்கிறது தமிழக பி.ஜே.பி வட்டாரம்.

`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்!' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா?

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களில், நான்கு உறுப்பினர்கள் இப்போது பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி, இவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளது தெலுங்கு தேசம் கட்சி. அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் தற்போது பி.ஜே.பி பக்கம் சாய்ந்துள்ளனர். அதேபோல், காபு சமுதாயத்தைச் சேர்ந்த தெலுங்குதேசக் கட்சியின் தலைவர்கள், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரின் தலைமையில் பி.ஜே.பி-யில் சேரப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ராஜ்யசபா உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்து அவர்களை பி.ஜே.பி-யின் பக்கம் திருப்ப அதே கட்சியைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அமித் ஷா. இதே முறையைத்தான், தமிழகத்திலும் கடைப்பிடிக்கவுள்ளது பி.ஜே.பி.

`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்!' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா?

தமிழகத்தைச் சேர்ந்த 12 ராஜ்யசபா எம்.பி-க்கள் தற்போது இருக்கிறார்கள். அதில் மூவரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையப்போகிறது. மீதம் ஒன்பது ராஜ்யசபா எம்.பி-க்கள்தான் இருப்பார்கள். இந்நிலையில், அ.தி.மு.க-வின் சசிகலா புஷ்பாவைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தவுள்ளது பி.ஜே.பி. இவரின் கணவர் டெல்லி பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். இதைப் பயன்படுத்தி, தமிழகத்தின் ராஜ்யசபா உறுப்பினர்களைப் பி.ஜே.பி பக்கம் கொண்டுவர சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இதனடிப்படையில் சசிகலா, அமித் ஷாவை ரகசியமாகச் சந்தித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக ராஜ்யசபா எம்.பி-க்களில் இரண்டுபங்கு உறுப்பினர்களை பா.ஜ.க-வில் இணைக்க வேண்டும் என்று அவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

`தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த பிளான்!' - துருப்புச்சீட்டு சசிகலா புஷ்பாவா?

இதையடுத்து, நான்கு ராஜ்யசபா உறுப்பினர்களிடம் பேசியிருக்கிறார். விரைவில் தமிழக அரசியல் வட்டாரத்திலும், கட்சித்தாவல் நடக்கும். இதுகுறித்துப் பேச சசிகலா புஷ்பாவைத் தொடர்புகொண்டோம். இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் பதிலளிக்க நான் விரும்பவில்லை என்பதோடு முடித்துக்கொண்டார் சசிகலா புஷ்பா.

Vikatan