Published:Updated:

`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்!' - சசிகலா புஷ்பா

ந.பொன்குமரகுருபரன்
`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்!'  - சசிகலா புஷ்பா
`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்!' - சசிகலா புஷ்பா

`ஜெயலலிதா என்னை அடித்தார்' என மாநிலங்களவையிலேயே குண்டை வீசியெறிந்து, தமிழக அரசியலை அதிரிபுதிரி ஆக்கியவர் அ.தி.மு.க, எம்.பி. சசிகலா புஷ்பா. அதிரடிக்குப் பெயரெடுத்தவர், அடுத்த குண்டை வீசியுள்ளார். `தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்’ என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்!'  - சசிகலா புஷ்பா

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களில், நான்கு பேர் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறியதால், சட்டப்படி அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயவில்லை. இதே பாணியில், மாநிலங்களவையிலுள்ள அ.தி.மு.க. எம்.பி-க்களை வளைக்கும் பொறுப்பை சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க தலைமை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நமது விகடன்.காம்-லும் செய்தி வெளியானது.

இந்துக் கடவுளின் பெயர் கொண்ட மூவர், விஜயமானவர் என நான்கு எம்.பி.க்கள் சசிகலா புஷ்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா புஷ்பா, ``மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அவரது சமூகநலத் திட்டங்கள் தமிழகத்தில் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. பலகோடி மக்கள் பயனடைந்திருந்தாலும், மோடி மீது தவறான புரிதலே இங்கு இருக்கிறது. இனி என் நடவடிக்கைகள் மோடி அரசு மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவே அமையும். தமிழகத்திலும் மோடி ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்” என்றவரிடம், ``நீங்கள் அ.தி.மு.க. எம்.பி-க்களை பா.ஜ.க-வுக்கு இழுக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறதே?” என்றோம். பலமாக சிரித்தவர், ``நான் மேலே கூறிய பதில்தான் இதற்கும் பதில். இதற்குமேல் நான் மேற்கொண்டு பேச விரும்பவில்லை” என்றார்.

`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்!'  - சசிகலா புஷ்பா

தற்போது மாநிலங்களவையில் அ.தி.மு.க-வின் பலம் 13 ஆக உள்ளது. இதில், நான்கு பேரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில், மூன்று எம்.பி-க்களை அ.தி.மு.க பெற முடியும். ஆக, மாநிலங்களவையில் அ.தி.மு.க-வின் பலம் மொத்தம் 12 எம்.பி-க்களாக இருக்கும். இவர்களில் 9 எம்.பி-க்களை வளைக்க சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க ‘அசைன்மென்ட்’ கொடுத்துள்ளதாம். இந்துக் கடவுளின் பெயர் கொண்ட மூவர், விஜயமானவர் என நான்கு எம்.பி-க்கள் சசிகலா புஷ்பாவிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சசிகலா புஷ்பாவின் அரசியல் ஆட்டத்தால், அ.தி.மு.க-வுக்குள்ளும் குழப்பங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. எம்.பி-க்களை தக்க வைப்பாரா எடப்பாடி?… பொறுத்திருந்து பார்ப்போம்.

Vikatan