Published:Updated:

அ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்!

எம்.கணேஷ்
அ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்!
அ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்!

டி.டி.வி தினகரனைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடிய தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், அ.தி.மு.க-வில் அவர் விரைவில் இணைய இருக்கிறார் என்றும், அதற்கு ஓ.பி.எஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்!

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ``தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கட்சி பேதம் என்பது இரண்டாம் பட்சம்தான். அனைவரும் மாமன், மச்சான் என்றுதான் அழைத்துக்கொள்வார்கள். அண்ணன் அ.தி.மு.க-வில் இருப்பார். தம்பி அ.ம.மு.க-வில் இருப்பார். இதுதான் உண்மை நிலை. அப்படி இருக்கையில், தேர்தலில் தோற்றதும், தங்க தமிழ்ச்செல்வனுக்கு கட்சிக்குள் சரியான மரியாதை இல்லாமல் போனது. அதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்தார். இனியும் இங்கு இருந்தால், தனது செல்வாக்குக்கு பங்கம் வந்துவிடும் என அஞ்சிதான் அ.தி.மு.க-வில் இணைய முயற்சி செய்தார். அவர் நேராக ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் பேசாமல், எடப்பாடி தரப்பினரிடம் பேசினார். சில ரகசிய சந்திப்புகளுக்குப் பிறகு எல்லாம் `ஓ.கே…’ ஆனது. ஆனால், கட்சிக்குள் நடந்த பல பிரச்னைக்குக் காரணம் தங்க தமிழ்ச்செல்வன்தான். அதை எடப்பாடிக்கு நினைவுபடுத்தினார் ஓ.பி.எஸ்.

அ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்!

மேலும், ஆரம்ப காலகட்டத்திலிருந்து தேனி மாவட்ட அரசியலில் ஒரே கட்சியில் இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வமும், தங்க தமிழ்ச்செல்வனும் பல முறை மோதியுள்ளனர். எனவே, மீண்டும் தங்க தமிழ்ச்செல்வனை கட்சிக்குள் அனுமதித்தால், தேனியில், தனக்கும், தன் மகனுக்கும் ஏதேனும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவும் இருக்கிறார். அதையடுத்து, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், தங்க தமிழ்ச்செல்வனுக்கு சில கண்டிஷன்ஸ் போட்டார் ஓ.பி.எஸ்.

1. மாவட்ட அளவில் கட்சி தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 2. மாநில பொறுப்பு தருகிறோம். அதை மட்டும்தான் கவனிக்க வேண்டும், 3. மாவட்ட கட்சி விவகாரங்களில்  தலையிடக் கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன்ஸ். இதை ஏற்றுக்கொண்டால், கட்சிக்குள் இணைவது மட்டுமல்லாது, மாநில அளவில் பெரிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது” என்றனர். விரைவில் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைவார் என்றே சொல்லலாம்.

Vikatan