Published:Updated:

“ஜீரோ பட்ஜெட் பிரசாரம்!” - சட்ட பஞ்சாயத்து இயக்கம் புது வியூகம்...

ஜீரோ பட்ஜெட் பிரசாரம்
பிரீமியம் ஸ்டோரி
ஜீரோ பட்ஜெட் பிரசாரம்

ஒரு வேட்பாளர் கைக்காசை மட்டும் நம்பியிருக்காமல், பொதுமக்களிடமிருந்து நிதி பெற்று, அதைத் தேர்தலுக்காக செலவழிப்பதுதான் ‘ஜீரோ பட்ஜெட்.

“ஜீரோ பட்ஜெட் பிரசாரம்!” - சட்ட பஞ்சாயத்து இயக்கம் புது வியூகம்...

ஒரு வேட்பாளர் கைக்காசை மட்டும் நம்பியிருக்காமல், பொதுமக்களிடமிருந்து நிதி பெற்று, அதைத் தேர்தலுக்காக செலவழிப்பதுதான் ‘ஜீரோ பட்ஜெட்.

Published:Updated:
ஜீரோ பட்ஜெட் பிரசாரம்
பிரீமியம் ஸ்டோரி
ஜீரோ பட்ஜெட் பிரசாரம்

‘சட்ட பஞ்சாயத்து’ இயக்கத்தின் நிர்வாகிகள் இப்போது நேரடி அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில், அந்த இயக்கத்தின் தலைவர் சிவா இளங்கோவுக்கு தாம்பரம் தொகுதியும், பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்துக்கு பல்லாவரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் பலரும் கோடிகளை இறைத்து பிரசாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில், இவர்களோ ‘ஜீரோ பட்ஜெட்’ பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். அதென்ன ஜீரோ பட்ஜெட்?

“ஒரு வேட்பாளர் கைக்காசை மட்டும் நம்பியிருக்காமல், பொதுமக்களிடமிருந்து நிதி பெற்று, அதைத் தேர்தலுக்காக செலவழிப்பதுதான் ‘ஜீரோ பட்ஜெட்.’ ஒரு வேட்பாளர், தேர்தலில் அதிக முதலீடுகளைச் செய்வதால்தான், போட்ட பணத்தை எடுப்பதற்காக, தான் வெற்றிபெற்றவுடன் ஊழல் செய்யத் தொடங்குகிறார். வாக்காளர்களுக்குப் பணமாகவும், பரிசுப் பொருள்களாகவும் அந்த வேட்பாளர் முதலிலேயே அளித்துவிடுவதால், அவர் செய்யும் தவறுகளை வாக்காளர்களால் தட்டிக் கேட்க முடிவதில்லை. மீறிக் கேட்பவர்களையும், ‘நீங்க சும்மாவா ஓட்டுப் போட்டீங்க.. பணம் வாங்குனீங்கல்ல...’ என்று வாயடைத்துவிடுகிறார்கள். இதை வேரறுப்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் ‘ஜீரோ பட்ஜெட்’ என்கிற புதுவகையான பிரசாரத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறோம்.

“ஜீரோ பட்ஜெட் பிரசாரம்!” - சட்ட பஞ்சாயத்து இயக்கம் புது வியூகம்...

இதன்படி, எங்கள் தேர்தல் செலவுக்குத் தேவைப்படும் நிதியை மக்களிடமிருந்தே பெறுகிறோம். இதற்கான நிதியை ‘கூகுள் பே’ உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் வங்கிக் கணக்குகள் மூலமாகத்தான் பெறுகிறோம். அது நூறு ரூபாயாக இருந்தாலும், லட்சம் ரூபாயாக இருந்தாலும் அந்த நிதிக்கு என்று கணக்கு வழக்குகளைப் பராமரிக்கிறோம். மக்களிடமிருந்து நிதி பெற்று, அதைத் தேர்தலுக்குச் செலவழிப்பதால் எங்களுக்குப் பொறுப்புணர்வும் ஏற்படுகிறது. நாளை நாங்கள் வெற்றிபெற்று வந்த பிறகு, மக்கள் எங்களைத் தைரியமாகக் கேள்வி கேட்க முடியும்.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கடந்த எட்டு வருட நிதி விவரங்களையெல்லாம் ஆன்லைனில் அப்லோட் செய்திருக்கிறோம். அந்த வெளிப்படைத் தன்மையைத்தான் தேர்தலிலும் நாங்கள் புகுத்து கிறோம். பல படித்த இளைஞர்களுக்கும், நிர்வாகத்திறன் உள்ளவர்களுக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், தேர்தல் செலவைப் பார்த்து மிரண்டு அந்த ஆசையைப் பூட்டி வைத்துவிடுகின்றனர். எங்கள் ‘ஜீரோ பட்ஜெட்’ பிரசாரத் திட்டம் அவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். ஒரு வேட்பாளர் நேர்மையானவர், திறமையானவர் என்று மக்கள் உணர்ந்தால், அவருடைய தேர்தல் பிரசாரத்துக்குத் தங்களால் முடிந்த அளவுக்கு நிதியுதவி அளிக்கலாம். இதனால், ஊழலின் வேர் அறுக்கப்படுவதுடன், இளைஞர்கள் அரசியலுக்கு வர வாய்ப்பும் உருவாகும்” என்றார் செந்தில் ஆறுமுகம்.

“ஜீரோ பட்ஜெட் பிரசாரம்!” - சட்ட பஞ்சாயத்து இயக்கம் புது வியூகம்...

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு வேட்பாளர் 30.8 லட்சம் ரூபாய் வரை தேர்தலுக்காகச் செலவழிக்கலாம். இந்தத் தொகையைக்கூட புரட்ட முடியாத எத்தனையோ இளைஞர்கள், திறமைசாலிகள், அனுபவசாலிகளுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ‘ஜீரோ பட்ஜெட்’ மாடல் கைகொடுக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism