வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (20/04/2015)

கடைசி தொடர்பு:09:33 (20/04/2015)

ஏப்ரல் 20: அடால்ஃப் ஹிட்லர்... பிறந்த தின சிறப்பு பகிர்வு..

ஹிட்லர் பரபரப்பை உண்டு செய்யும் ஒரு பெயர் .தான் வாழ்ந்த காலத்தின் வரலாற்றை தன்னை சுற்றியே தவறான காரணங்களுக்காக சுழல வைத்தவர் இவர் .அடிப்படையில் ஆஸ்திரிய நாட்டில் பிறந்த இவரின் தாத்தா யூதர் என்பது சமீபத்தில் தான் தெரியும் .அப்பா பெல்ட்டால்,சிகரெட்டால் என எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அடித்து துவைத்தார் இவரை.வலிகளால் வாழ்க்கை நகர்ந்த பொழுது இருந்த ஒரே ஆறுதல் அம்மாவின் அரவணைப்பு மட்டுமே

அம்மாவும் இறந்து யாருமே இல்லாத நிலையில் நடுத்தெருவில் ஏழைகளுக்கு வழங்கும் சூப் குடிக்கும் கூட்டத்தில் இவர் நின்ற பொழுது அங்கே யூதர்களின் கூட்டம் இல்லாததை கண்டார் .யூதர்கள் செல்வந்தர்கள் என தெரியும் அவருக்கு ,தன் நாட்டை அவர்கள் கூறு போட்டு உண்கிறார்கள் என்கிற எண்ணம் அப்பொழுதே வலுப்பெற ஆரம்பித்தது.



ஓவியக்கல்லூரிக்கு போனார் ;ஓவியம் வரைய வராது என அனுப்பி விட்டார்கள்.அன்றைக்கு கொஞ்சம் கனிவோடு மனிதரை உள்ளே விட்டிருந்தால் நாடுகளின் எல்லைகள் மாறாமல் இருந்திருக்க கூடும் .உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தேசங்களுக்கு இணையாக தானும் மாற ஜெர்மனி ஆவல் கொண்டது .அப்பொழுது இரு கொலைகள் புகைந்துகொண்டிருத்த குண்டை வெடிக்க வைத்தது .முதல் உலகப்போர் நடந்து முடிந்தது ;ஜெர்மனி தோல்வியை தழுவியது

எல்லா தப்புக்கும் ஜெர்மனி தான் காரணம் என வெர்சைல்ஸ் ஒப்பந்தம் சொன்னது.பல கோடிகளை இழப்பீடாக வாங்கிய வென்ற நாடுகள் ;இருந்த பல பகுதிகளை கூறு போட்டு தனிதனி நாடுகள் ஆக்கினார்கள் .ராணுவ பலத்தை குறைக்கவும் செய்தார்கள் .அவமானத்தால் ஜெர்மானியர்கள் வருந்தினார்கள் .கரன்சி மதிப்பு விழுந்தது ;நாடு முழுக்க பசி தாண்டவமாடியது

ஹிட்லர் என்னென்னவோ பண்ணி பார்த்துவிட்டு அரசியல் பக்கம் வந்து சேர்ந்தார் ;ஒரு முறை ஆட்சியை கவிழ்கக புரட்சி செய்யப்போய் மது விடுதிலேயே கைது செய்யப்பட்டார் .சிறையில் இருந்த பொழுது மெயின் காம்ஃ ப் எழுதினார் .அப்படி ஒரு வசீகரமான நடை .நம்முடைய சிக்கல்களுக்கு மற்ற இனங்களின் ஆதிக்கமே காரணம் ;நாசி இனம் ஒங்க வேண்டும் .யூதர்கள் முதலிய தீயவர்கள் ஒழிய வேண்டும் என முழங்கினார்

தனி வாழ்க்கையில் சுத்த சைவம்,நோ சிகரெட்,நோ மது,ஓரிரு பெண்கள் தான் மொத்த வாழ்க்கையில் .அவர்கள் மீதும் பெரிய போதையெல்லாம் இல்லை .ஆனால் ஹிட்லர் போர்வெறியின் குழந்தை ;இனவெறியின் மகன் .ஏகாதிபத்திய நாடுகளின் வரிசையில் ஜெர்மனி இணைய முயன்ற பல்வேறு முன்னெடுப்புகள் கூட்டிச்சென்ற முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்பதற்கு யூதர்கள் காரணம் என இவர் திடமாக நம்பினார் .பேச்சால் இனவெறியால் மக்களை கட்டிப்போட்டார் .

வெளியே வந்ததும் தேர்தலில் நின்றார் ;ஓரளவுக்கு அதிகமான சீட்கள் கிடைத்து இருந்த நேரம் .சான்சலர் ஆக இருந்த நபர் கண்ணை மூடியது வசதியாக போனது .சர்வாதிகாரத்தை கையில் எடுத்தார் .பொருளாதாரத்தை மீட்டார் .

ஹிட்லரின் எழுத்திலும் பேச்சிலும் வசீகரம் தொனிக்கும் .பிரசார பாணி அலாதியானது .முதலில் ஒரு பொய்யை மீடியா சொல்லும் ;இன்னொரு புறம் மக்கள் கூடுகிற இடங்களில் எளிய மக்கள் போல வேடமிட்டு ஒற்றர்கள் சொல்வார்கள்; ஜோசியர்களும் சொல்வார்கள் .எங்கெங்கும் அந்த பொய் பரவும்.
யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள் ;விஷ வாயு சேம்பருக்குள் அனுப்பி மொத்தமாக க்ளோஸ் செய்வார்கள் ;துப்பாக்கியால் சுட்டு ,சித்திரவதை செய்து கொல்வார்கள் .எந்த அளவுக்கு நிலைமை மோசம் என்றால் இந்த அரும்பணியை செய்வதற்கு ஒரு தனி அமைச்சகமே இருந்தது .பெரும்பாலும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஹிட்லரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு லட்சகணக்கான யூத குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் என சகலரும் கொல்லப்பட்டனர் பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் மிசின் என அவர் கருதினார் .

ராணுவத்தை நவீனப்படுத்தினார் .மற்ற நாடுகளின் மீது அங்கே நாஜிக்கள் இருக்கிறார்கள் இடத்தைக்கொடு என்றும் கேட்பார் ;பின்னர்,போய் ஜெயித்து வந்து விடுவார் இப்படியே போகிற பக்கமெல்லாம் நாடுகள் வீழ்ந்தன;ஸ்டாலினுடன் கூட்டு போட்டுக்கொண்டு உலகப்போரில் கலக்கினார்.திடீர் என்று இருவருக்குள்ளும் சிக்கல்கள் வந்தன ;அதற்குள் பிரான்ஸ் தொடங்கி பல்வேறு நாடுகள் ஜெர்மனி வசம் வந்திருந்தன .இப்பொழுது இரண்டு மலைகளும் மோதிக்கொண்டன .

விலகவே விலகாத செம்படைகளிடம் பல கால போராட்டத்துக்கு பின் இவரின் படைகள் வீழ ஆரம்பித்தன .ஒரே ஒரு நாள் பெத்தடின் கண்ணில் போட்டுக்கொண்டதும் நார்மண்டியில் புகுந்து விளையாடின எதிர் படைகள் .தோல்வி தெரிந்தது .இவா பிரவுனுக்கு கொஞ்சம் விஷம் ;தனக்கு தோட்டாக்கள் என முடித்துக்கொண்டார் அவர் .அதற்குள் சில கோடி மக்களும், பல லட்சம் யூதர்களும் கொல்லப்பட்டு இருந்தார்கள்.

- பூ.கொ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்