Published:Updated:

மின் கட்டணம் விர்ர்ர்ர்ர்... அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

மின்சாரம் (Representational Image)
News
மின்சாரம் (Representational Image)

2 யூனிட் மின்சாரம் தயாரித்தால் அதில் 1 யூனிட் கொண்டு செல்வது மற்றும் விநியோகிப்பதிலேயே வீணாகும். ஆகவே, நாம் ஒரு யூனிட் மின்சாரத்தை வீணாக்கினால் உற்பத்தியிலிருந்து 2 யூனிட் மின்சாரத்தை வீணடிக்கிறோம். மின் கட்டண உயர்வின் மூலம் தற்காலிக பிரச்னையை சமாளிக்க மட்டும்தான் முடியும்.

மின் கட்டணம் விர்ர்ர்ர்ர்... அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

2 யூனிட் மின்சாரம் தயாரித்தால் அதில் 1 யூனிட் கொண்டு செல்வது மற்றும் விநியோகிப்பதிலேயே வீணாகும். ஆகவே, நாம் ஒரு யூனிட் மின்சாரத்தை வீணாக்கினால் உற்பத்தியிலிருந்து 2 யூனிட் மின்சாரத்தை வீணடிக்கிறோம். மின் கட்டண உயர்வின் மூலம் தற்காலிக பிரச்னையை சமாளிக்க மட்டும்தான் முடியும்.

Published:Updated:
மின்சாரம் (Representational Image)
News
மின்சாரம் (Representational Image)

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையின் கடன் ரூ.12,647 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நிலைமையை சமாளிக்க தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். ஏன் இந்த நிலை? மின் கட்டணத்தை உயர்த்துவதுதான் இதற்குத் தீர்வா? இனி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பன உள்ளிட்ட கேள்விகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயிராற்றல் துறையின் முன்னாள் பேராசிரியர் வெங்கடாசலத்திடம் கேட்டோம்...

முனைவர் வெங்கடாசலம்
முனைவர் வெங்கடாசலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``எந்தத் திக்குக்கும் செல்ல முடியாது முட்டுச்சந்தில் நிற்பது போல்தான் மின்சாரத்துறை தற்போது இருக்கிறது. அளவுக்கு அதிகமான கடனில் மின்சாரத்துறை மூழ்கியிருக்கும் சூழலில் மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர நமக்கு வேறு வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே நிறைய கடன் வாங்கிவிட்டோம். மாற்று மின் சக்திகளை உருவாக்குவதற்கான முதலீடுகளை மேற்கொள்ளவும் தற்போது வழியில்லை.

ஆரம்பத்திலேயே இதை முறைப்படுத்தியிருந்தால் இத்தனை கடனுக்கு ஆட்பட்டிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது. அந்த எல்லையைக் கடந்துவிட்டதால் இன்றைக்கு அரசால் எதுவும் செய்ய முடியாத நிலைதான் இருக்கிறது. மிகப்பெரும் துறையான மின்சாரத்துறையின் நிதியிலிருந்துதான் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க முடியும். மின் உற்பத்தித் துறையில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் சிக்கிக்கொண்டிருக்கிறது மின்சாரத்துறை. மின் கட்டண உயர்வின் மூலம் தற்காலிகமாக நிலைமையை சமாளிக்க மட்டும்தான் முடியுமே தவிர இது நிரந்தரத் தீர்வாக இருந்துவிடாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ் கடன் பெற பல விதிமுறைகள் உள்ளன. தமிழ்நாடு மின் வாரிய முறைப்படுத்தும் ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் மத்திய அரசு கடன் தரும். ஏன் 100 யூனிட் இலவசமாகத் தருகிறீர்கள்? விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மின்சாரத்துறை மூலம் வருமானம் ஈட்ட சாத்தியமில்லாத சூழலில் எப்படிக் கடன் கொடுப்பார்கள். ஆகவே, தற்போதைய மோசமான நிலையிலிருந்து தமிழ்நாடு அரசு மட்டுமல்ல நாம் அனைவரும் ஓர் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வுடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

காற்றாலை மின்சாரம்
காற்றாலை மின்சாரம்

2 யூனிட் மின்சாரம் தயாரித்தால் அதில் 1 யூனிட் கொண்டு செல்வது மற்றும் விநியோகிப்பதிலேயே வீணாகும். ஆகவே நாம் ஒரு யூனிட் மின்சாரத்தை வீணாக்கினால் உற்பத்தியிலிருந்து 2 யூனிட் மின்சாரத்தை வீணடிப்பதாக ஆகும். ஒவ்வொரு கிராமங்களிலும் மின் கம்பங்களிலிருந்து திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிளுக்கு சிலர் மின்சாரத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது, அனுமதி பெற்று அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது கணக்குக்குள்ளேயே வராது. இதுவும், மின்சார வாரியத்துக்கு மிகப்பெரும் வருவாய் இழப்புதான்.

தேவையான அளவு மட்டும்தான் மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக ஒருபோதும் மின் ஆற்றலை வீணடிக்கக் கூடாது என்கிற தெளிவுடன் இருந்தால் அடுத்தகட்ட மின் கட்டண உயர்வை தடுக்க முடியும். தமிழ்நாடு அரசு வற்றாத மின் உற்பத்தியை நோக்கி நகர வேண்டும். இன்றைக்கு நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் அனல் மின் நிலையத்தின் மூலம்தான் பெருமளவில் மின்சாரத் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். நிலக்கரி என்பது தீர்ந்து போய்விடக்கூடிய எரிபொருள். இன்னும் 200 ஆண்டுகளுக்குக்கூட நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.

தீர்ந்து போய் விடாத ஆதாரமான நீர், காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரம் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. காற்றின் வீச்சு அதிகமுள்ள கடற்கரைப்பகுதிகளில் மணிக்கு 2 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் நவீன காற்றாலைகளை அமைத்திட வேண்டும். சூரிய ஒளி மின்சார உற்பத்தி மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கிறது. அதை ஊக்கப்படுத்த வேண்டும்.

 சூரிய ஒளி மின்தகடுகள்
சூரிய ஒளி மின்தகடுகள்

தங்களது வீட்டு மாடியில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்ய முன் வருகிறவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும். வற்றாத மின் உற்பத்தி முறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வந்தால் அதற்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கலாம். இன்றைக்கு குறைந்த அளவிலான மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வந்துவிட்டன.

விவசாயத்துறையில் அதிக மின் ஆற்றலை எடுக்கும் பழைய மின் மோட்டார்களை அகற்றிவிட்டு நவீன மின் மோட்டார்கள் அமைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் தற்சார்பு மின் உற்பத்தியில் ஈடுபட முன் வர வேண்டும். நீடித்த மின் உற்பத்திகான வழிவகைகள் செய்வதோடு, மின் ஆற்றலை வீணடிப்பதை தடுப்பதன் வழியாக நாம் இனி இது போன்ற மின் கட்டண உயர்வுக்கு ஆட்பட வேண்டிய தேவையிருக்காது" என்று ஆக்கபூர்வமான ஆலோசனையை சொல்லி முடித்தார் வெங்கடாசலம்.