Published:Updated:

தடியடியை கண்டித்து இடிந்தகரை கிராமத்தினர் உண்னாவிரத போராட்டம்!

தடியடியை கண்டித்து இடிந்தகரை கிராமத்தினர் உண்னாவிரத போராட்டம்!
தடியடியை கண்டித்து இடிந்தகரை கிராமத்தினர் உண்னாவிரத போராட்டம்!
தடியடியை கண்டித்து இடிந்தகரை கிராமத்தினர் உண்னாவிரத போராட்டம்!

கூடங்குளம்: கூடங்குளம் அணு உலையை மூடவும், போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும் இடிந்தகரை மக்கள், நேற்று மாலை முதல் 48 மணி நேர உண்னாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 

இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில்  போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும்  இடையே வெடித்த மோதலைத் தொடர்ந்து  இடிந்தகரை உள்ளிட்ட பல கிராமங்களிலும் போராட்டம் பரவியுள்ளது.

கூடங்குளம் போராட்டம் வெடித்ததிலிருந்து  இதுவரை அந்த கிராமத்திற்குள் நுழையாத  போலீசார், நேற்று முதன்முறையாக இடிந்தகரைக்குள்  நுழைந்தனர். அணு உலையை  முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்கள், போலீசாரின் தடியடி தாக்குதலைத் தொடர்ந்து  கடலுக்குள் சென்று தப்பினர்.

அத்துடன் இடிந்தகரை கிராமத்தின் தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டு மக்கள்  திரட்டப்பட்டனர்.இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது.இடிந்தகரையில் உள்ள டாஸ்மாக்  கடை உள்ளிட்ட பல இடங்களில் தீ வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

##~~##
இந்நிலையில் இடிந்தகரையைத் தொடர்ந்து,கூடங்குளம் கிராமத்திலும் வன்முறை  வெடித்தது. மேலும் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டதால் தீவைப்பு சம்பவங்கள்  நடந்தன. கூடங்குளம்  பஞ்சாயத்து அலுவலகத்திலும் தீ வைக்கப்பட்டுள்ளது.  போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசாரும் முயற்சி செய்கின்றனர்.
இதனிடையே வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து,கூடங்குளத்தில் உள்ள மீனவர்கள்  உடனடியாக வெளியேற போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் கூடங்குளத்திலும்,இடிந்தகரையில் பெரும் பதட்டமும் பரபரப்பும்  காணப்படுகிறது.இதற்கிடையே கன்னியாகுமரியில் கூடங்குளத்தில் போலீசார் தடியடியை  கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.