Published:Updated:

கூடங்குளம்: கடலுக்குள் இறங்கிப் போராட்டம்!

கூடங்குளம்: கடலுக்குள் இறங்கிப் போராட்டம்!
கூடங்குளம்: கடலுக்குள் இறங்கிப் போராட்டம்!
கூடங்குளம்: கடலுக்குள் இறங்கிப் போராட்டம்!

நெல்லை: கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை கைவிடவேண்டும் என்பது  உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக்குழுவினர் இன்று  கடல்நீருக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்த முற்றுகை போராட்டத்தில்  வன்முறை வெடித்தது.இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் ஏற்பட்ட பதட்டம் 3  தினங்களுக்கு பிறகு தணிந்துள்ளது.கலவரம் தொடர்பாக இதுவரை 52 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணியை மேற்கொள்ளக்  கூடாது, கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும், கைது  செய்யப்பட்டவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும்,காவல்  துறையினரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்  ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் போராட்டக்குழுவினர்,கடலில்  இறங்கி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

##~~##
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் போராட்டக்காரர்கள் இடிந்தகரை கடலில்  இறங்கி இந்த புதிய போராட்டத்தை தொடங்கினர்.ஒவ்வொரு நாளும் காலை 10 மணி  முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் குழு  குழுவாக பங்கேற்கிறார்கள்.
இடிந்தகரையில் இன்றும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவ-  மாணவிகளின் காலாண்டு தேர்வு பாதிக்கப்பட்டுள்ளது. வைராவிகிணறு, தாமஸ்  மண்டபம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், புல்லமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்  போக்குவரத்து இன்றும் முடங்கியுள்ளதால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.