Published:Updated:

அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிப்பு!
அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

இடிந்தகரை: வரும் அக்டோபர் மாதம் 29-ம் தேதி தமிழக சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ள அணுஉலை எதிர்ப்புக் குழு,இப்போராட்டத்திற்கு 1 லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  

அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில், இடிந்தகரையில் முக்கிய ஆலோசனை  நடைபெற்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடந்து வரும் போராட்டம் 400 நாட்களுக்கும் மேலாக நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நீடித்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மணலில் பாதியளவு புதைந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இடிந்தகரையில் நேற்று நடைபெற்றது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையின் வைரவிழாவை முன்னிட்டு, அடுத்தமாதம் 29 ம் தேதி சட்டசபையை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

##~~##
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கொளத்தூர் மணி,இந்த போராட்டத்தில், அணுஉலைக்கு எதிரான அரசியல் கட்சிகள்,அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் பேரை திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது என்றும், உலகளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இதனை ஒரு மாபெரும் போராட்டமாக முன்னெடுத்துச் செல்வது எனவும் இறுதி செய்யப்பட்டடது என்றார்.
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக, நேற்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம் என கூறியது, இந்த கருத்து, இடிந்தகரை பகுதி மக்கள் உள்ளிட்ட அணுஉலைக்கு எதிரானவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,அணுஉலைக்கு எதிரானப் போராட்டதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இந்த புதிய அறிவிப்புகளை போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர்.