Published:Updated:

அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை: உதயகுமார் அறிவிப்பு

அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை: உதயகுமார் அறிவிப்பு
அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை: உதயகுமார் அறிவிப்பு
அணு உலைக்கு எதிராக சட்டசபை முற்றுகை: உதயகுமார் அறிவிப்பு

நெல்லை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக வருகிற 29-ம் தேதியன்று தமிழக  சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டக்குழு  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை,தூத்துக்குடி,குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்,இன்று காலை 1200  படகுகளில் சென்று கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து 500 மீட்டர்  தொலைவில் நின்று முற்றுகையிட்டனர்.

ஒவ்வொரு படகிலும் 5 முதல் 15 பேர் வரை சென்றனர்.சுமார் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டக்குழு  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜன், முகிலன்  ஆகியோர் தனி படகில் கடலுக்குள் சென்றனர்.

பின்னர் உதயகுமார் தலைமையில் மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  அணுமின்நிலையத்தை மூடக்கோரி கோஷம் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார்,"கூடங்குளம்  அணுமின்நிலையத்தை மூட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ்  பெற வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை வெளியேற்ற  வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் போராட்டக்காரர்களை உடனே  விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கூடங்குளம்  அணுமின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்.

##~~##
இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்திற்குட்பட்ட 48 கடற்கரை கிராமங்களை  சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டம் அறவழி போராட்டம். இது  குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்.
கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு நாங்கள்தான் தண்ணீர் வழங்குகிறோம்.  425 நாட்களாக நாங்கள் நடத்திய போராட்டம் அறவழியில்தான் நடந்துள்ளது.பொது  சொத்துக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தவில்லை.முற்றுகை போராட்டம் கூட  அணுமின்நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில்தான் நடக்கிறது.
என்மீது போடப்பட்டுள்ள பிடிவாரன்ட் வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.கூடங்குளம்  அணுமின்நிலையத்தை மூடக்கோரி வருகிற 29 ம் தேதி தமிழக சட்டசபையை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.