Published:Updated:

கூடங்குளம் போராட்டக்காரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கூடங்குளம் போராட்டக்காரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
கூடங்குளம் போராட்டக்காரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
கூடங்குளம் போராட்டக்காரர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் அணு உலை முற்றுகை போராட்டம் நடத்தினர்.அப்போது கூடங்குளம் கடற்கரையில் வன்முறை வெடித்தது.

இது தொடர்பாக 50–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இதில் 10 பேர் தவிர மற்ற அனைவரும் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் 10 பேரும் பாளையங்கோட்டை,திருச்சி மற்றும் வேலூர் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியம் பட்டம் கட்டி என்பவருடைய மகன் நஸ்ரேன் (வயது 40) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த லூர்துசாமி (68) ஆகிய 2 பேர் மீதும் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

அவர்கள் கூடங்குளத்தில் அணு உலையை மூட வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் அணு மின்நிலைய ஊழியர்களை சிறை பிடித்ததாகவும், அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

##~~##
இதையொட்டி நஸ்ரேன், லூர்துசாமி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் செல்வராஜ், 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்பால், போராட்டக் குழுவைச் சேர்ந்த நஸ்ரேன் மற்றும் லூர்துசாமி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தார்.இதற்கான உத்தரவு நகல் வேலூர் சிறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.