Published:Updated:

இழப்பீடு கோரி ஆட்சியர் அலுவலகங்கள் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: நீரின்றி கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி நாகப்பட்டினம்,  திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு  விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

நீரின்றி கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாகப்பட்டினம், திருவாரூர்  தஞ்சை,திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களை  முற்றுகையிட்டு விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

##~~##
போராட்டத்தின்போது போலீசாருக்கும்,விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
நாகையில் விவசாயிகளுடன் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் போராட்டத்தில் பங்கேற்றார்.  அதே போன்று காய்ந்த பயிர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்  விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருச்சியில் விவசாயிகள் மனு கொடுக்க வந்ததை போலீசார் தடுத்ததால்,  விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும் அனுமதி  மறுக்கப்பட்டதால் நெற்கதிர்,வாழை கன்றுகளுடன் விவசாயிகள் தர்ணா போராட்டம்  நடத்தி வருகின்றனர்.