Published:Updated:

அப்சல் குரு தூக்கு: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எதிர்ப்பு!

அப்சல் குரு தூக்கு: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எதிர்ப்பு!
அப்சல் குரு தூக்கு: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எதிர்ப்பு!

அப்சல் குரு தூக்கு: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எதிர்ப்பு!

ஸ்ரீநகர்: அப்சல் குருவை தூக்கில் போட்டதற்கு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு டெல்லி திகார் சிறையில் நேற்று  முன்தினம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.அப்சல் குரு காஷ்மீர் மாநிலத்தைச்  சேர்ந்தவர் என்பதால், அங்கு சில இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் அப்சல் குருவை தூக்கில் போட்டதற்கு காஷ்மீர் முதல்வர் உமர்  அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

##~~##
இதுகுறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,"காஷ்மீரில் ஒரு  தலைமுறைக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக  உணருகிறார்கள். தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற மனநிலையில் அவர்கள்  இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவம்  காஷ்மீர் மாநில இளைய தலைமுறையினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
 
அப்சல் குருவை சந்திக்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்காதது மிகவும் துயரமானது  ஆகும். மேலும் அவருக்கு இறுதிச் சடங்குகளை நடத்தவும் அவர்களை  அனுமதிக்கவில்லை. தூக்கு தண்டனை கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும்  விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுவது இல்லை என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா  நிரூபிக்கவேண்டும். அப்சல் குருவை தூக்கில் போட்ட சம்பவம் நீண்டகால விளைவுகளை  ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது" என்றார்.
அடுத்த கட்டுரைக்கு