Published:Updated:

காவிரி தீர்ப்பு: கர்நாடகம் - தமிழகம் இடையே அரசு பேருந்து சேவை நிறுத்தம்

ஈரோடு: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டதை  தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம் நீடிப்பதால், கர்நாடகம் - தமிழகம்  இடையே அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டதற்கு கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

##~~##
இந்நிலையில் வன்முறையாளர்கள் பேருந்தை சேதப்படுத்தக் கூடும் என்பதால் தமிழகத்திலிருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக செல்லும் அரசு பேருந்துகள் புதன்கிழமை முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அதே போல் கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரக் கூடிய அரசு பேருந்துகளும் வரவில்லை.  அதே சமயம் ஒரு சில தனியார் நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.